வாய்வழி செக்ஸ் ரொம்ப ஆபத்தானதா? அதனால் வரும் பாதிப்புகள் தெரியுமா?

First Published | Apr 28, 2023, 11:48 AM IST

வாய்வழி உறவு கொண்ட பல இளைஞர்கள் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாய்வழி செக்ஸ் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு என்ன தொடர்பு?  

இரண்டு தசாப்தங்களாக மேற்கத்திய நாடுகளில் தொண்டை புற்றுநோய் அதிகரித்து வருகிறது. தி கன்வர்ஜென்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் இதை ஒரு தொற்றுநோய் என்று விவரிக்கிறார்கள். இந்த அறிக்கை தொண்டை புற்றுநோய் அல்லது டான்சில்ஸ், வாய் புற்றுநோய் மற்றும் வாய்வழி உடலுறவு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை விளக்குகிறது.   

மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தொண்டை புற்றுநோய்க்கான முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். யுஎஸ் சிடிசி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட தொண்டை புற்றுநோய்களில் 70% எச்விபியால் ஏற்படுகிறது. இந்த HPV என்ற வைரஸ் வாய் மற்றும் தொண்டையை பாதிக்கிறது. இதனால் புற்றுநோய் வேகமாக வளரும். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். ஏனெனில் HPV பாலியல் ரீதியாக பரவுகிறது. 

Tap to resize

இந்த வைரஸ் வாய் வழியாக பரவுவதற்கு வாய்வழி உடலுறவு முக்கிய காரணம். அறிக்கையின்படி, ஒரு நபர் 6 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் வாய் வழி பாலுறவு வைப்பதால் தொண்டை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 8.5 மடங்கு அதிகமாக உள்ளது. வாய்வழி உடலுறவு என்பது வழக்கத்திற்கு மாறான உடலுறவு முறையாகக் கருதப்படுகிறது. ஆனால் தற்போதைய இளம்தலைமுறையினர் வாய் வழி உறவை அதிகம் விரும்புகின்றனர்.  

எச்.பி.வி என்ற வைரஸால் ஒருமுறை பாதிக்கப்பட்டால், அதை முழுமையாக அகற்றுவது சாத்தியமில்லை என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ்கள் உடலில் தங்கி புற்று நோயை உண்டாக்குகிறது என்று ஆய்வறிக்கை தெளிவுபடுத்துகிறது. 

இதையும் படிங்க: அடிக்கடி சுய இன்பம்... இந்த பாதிப்புகள் வருமா? உண்மை என்ன?

வாய்வழி செக்ஸ் மிகவும் பாதுகாப்பானது என இளைஞர்கள் விரும்புகிறார்கள். இது கர்ப்பத்தை ஏற்படுத்தாது என்பது ஒரு வசதியான விஷயம். ஆனால் உண்மையில் இதில் கர்ப்பம் மட்டும் தான் உருவாகாது. ஆனால் பல பாலியல் பிரச்சனைகளும் வரும். வாய்வழி உடலுறவில் பங்கேற்பவர்கள் பாலியல் பரவும் நோய்களின் அபாயத்தில் உள்ளனர். ஆணுறைகளைப் பயன்படுத்தாமல் உடலுறவு கொள்ளும்போது உடல் திரவங்களை நேரடியாக வெளியேறும். பல பாலியல் துணைகள் இருப்பது பாதுகாப்பானது அல்ல. வாய்வழி உடலுறவு கொள்ளும்போது பாலியல்ரீதியான நோய்கள் பரவுகின்றன.  

வாய்வழி உடலுறவின் போது நீங்களும் உங்கள் துணையும் நல்ல சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும். பங்கேற்பதற்கு முன்பும் சுத்தம் அந்தரங்க உறுப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். உடலுறவுக்கு பிறகும் சுத்தம் செய்யுங்கள். உங்களுக்கு வாயில் புண்கள் அல்லது காயங்கள் இருந்தால் வாய்வழி உடலுறவை முற்றிலும் தவிருங்கள். இவை முழுமையாக குணமடைந்த பின்னரே உடலுறவு கொள்ள வேண்டும். உடலுறவுக்குப் பிறகு வாயில் புண்கள், காயங்கள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது நல்லது. 

இதையும் படிங்க: செக்ஸ் வெச்சிக்கிறப்ப முனங்கினால்... இப்படியெல்லாம் காரணம் சொல்றாங்க! அடபாவிகளா..

Latest Videos

click me!