குளிர்காலத்தில் டான்சில் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? செலவில்லாமல் அதிலிருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்!!

First Published | Nov 25, 2023, 12:04 PM IST

இந்த குளிர்காலத்தில் டான்சில் வலி தாங்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கான சில வீட்டு வைத்தியம் இங்கே உள்ளன. அவை..

டான்சில் என்பது வருடத்தின் எந்த நேரத்திலும் ஏற்படக்கூடிய ஒரு தொற்று நோய் என்றாலும் காய்ச்சல் மற்றும் குளிர்காலத்தில் இது அடிக்கடி நிகழ்கிறது. எனவே, டான்சில் உள்ளவர்கள் குளிர் காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குளிர்காலத்தில் டான்சில் தொற்று உள்ளவர்கள் கடுமையாகப் பாதிப்படுவர். இவற்றின் காரணமாக தொண்டையில் வீக்கம் மற்றும் வலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இன்னும் சொல்லப் போனால் உண்ணும் உணவை கூட அவர்கள் விழுந்துவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள்.

குளிர் காலத்தில் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். சிலர் இந்த வலியைத் தாங்க முடியாமல் மருத்துவரை அணுகினால், சிலருக்கு மாத்திரைகள் மூலம் நிவாரணம் கிடைக்கும். ஆனால் மெடிக்கல் ஷாப் செல்லாமல் வீட்டிலேயே சில எளிய டிப்ஸ்களைப் பின்பற்றினால், டான்சில் பிரச்சினையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

Latest Videos


தேன் - மஞ்சள் பால்: தேன் மற்றும் மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் பால் குடிப்பதால் உடனடி ஆற்றல் கிடைக்கும். எனவே, டான்சில் பிரச்சனையால் அவதிப்பட்டால், தேன் மற்றும் மஞ்சள் கலந்த பாலில் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள்.

இதையும் படிங்க:  குளிர் காலத்தில் 'சரக்கு' அடிச்சா இருமல், சளி குணமாகுமா? உண்மை என்ன?

கிராம்பு: கிராம்பு நம் சமையலறையிலும் உள்ளது. இவை நல்ல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன. எனவே கிராம்பு தொண்டை புண் மற்றும் டான்சில் குறைக்க உதவுகிறது. கிராம்புகளை மென்று தின்றால் டான்சில் அளவும் குறையும் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள். மேலும் இது வாய் துர்நாற்றத்தையும் நீக்குகிறது.

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் உதடுகள் வெடிப்பு? இத தடவுங்க...விரைவில் குணமாகும்!!

உப்பு நீர்: டான்சில் புண் இருக்கும் போது உப்பு நீரில் வாய் கொப்பளிக்க நல்ல நிவாரணம் கிடைக்கும். வலியின் தீவிரமும் குறைகிறது. தொண்டை வலி உள்ளவர்கள் உப்பு நீரில் வாய் கொப்பளிக்கலாம். இப்படி உப்புநீரை வாய் கொப்பளிப்பதன் மூலம் வீக்கம் பிரச்சனையும் குறையும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

துளசி இலைகள்: பொதுவாக அனைவரது வீட்டிலும் துளசி செடி இருக்கும். துளசி செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. துளசி இலைகள் மூலம் எத்தகைய பிரச்சனைகளையும் சரி செய்து கொள்ளலாம். டான்சில்ஸ் வலியால் அவதிப்படுபவர்கள் துளசி இலைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் வலி மற்றும் வீக்கம் குறையும். இதனுடன் சளி, இருமல் போன்றவையும் குறையும். மேலும் துளசி இலைகளால் செய்யப்பட்ட கஷாயத்தை குடிப்பது நல்லது.

click me!