தமிழில் அத்திப்பழம் என்று குறிப்பிடப்படும் நிலையில், ஆங்கிலத்தில் ஃபிக் எனவும் இந்தியில் அஞ்சீர் என்றும் பெயர் பெறுகிறது. இது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக பூமியின் தோன்றிவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட இந்த பழம், பெரும்பாலும் உலர்ந்த நிலையில் தான் விற்பனைக்கு கிடைக்கின்றன. பல்வேறு நாடுகளில் அத்திப் பழத்தின் காய்களை சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். இதை கொண்டு செய்யப்படும் சாலடுகள், ஜாம் மற்றும் சட்னி போன்றவை பிரபலமான ஒன்று. இதுதவிர அழற்சி, புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களுக்காக மருந்து தயாரிப்பதற்கும் அத்திப்பழம் அல்லது காய் பயன்படுத்தப்படுகிறது. இது சருமபப் பாதுகாப்பிலும் முக்கியத்துவம் பெறுகிறது. பல்வேறு பிராண்டுகள் அத்திப்பழத்தை வைத்து மாய்ச்சுரைஸர் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உடல் நன்மைகள்
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது. இதை தினசரி இரவு ஊறவைத்து காலையில் மிக்ஸியில் அரைத்து குடித்து வந்தால், செரிமானப் பிரச்னைகள் எளிதில் குணமாகும் மற்றும் வயிற்றுப் பிரச்னைகள் இல்லாமல் போகும்.
இருதய நலன்
இதில் பொட்டாசியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இருதயத்துக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் இருதய நலனை பாதுகாப்பதில் முன்னிலை பெறுகிறது. அத்திப்பழத்தில் கிளைசெமின் இண்டெக் என்கிற பண்பு குறைவாக உள்ளது. இதை தினசரி உட்கொண்டு வருபவர்களுக்கு ரத்தச் சக்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
எலும்பு உறுதி
பொதுவாக அத்திப்பழத்தில் கால்சியம் நிறைந்து காணப்படுகிறது. வலுவான எலும்புகளை விரும்புவோர், தினமும் அத்திப்பழத்தை பாலில் ஊறவைத்து, ஜூஸ் போட்டு சக்கரை சேர்க்காமல் குடித்துவரலாம். இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற முடக்குவாத பிரச்னைகள் எதுவும் வராது. இதில் கலோரி மிகவும் குறைவு மற்றும் நார்ச்சத்து மிகவும் அதிகம். அதனால் உடை எடை குறைக்க விரும்புபவர்கள் அத்திப்பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.
கற்பூரம் பூஜைக்கு மட்டுமின்றி கூந்தலுக்கும் நல்லது- தெரியுமா உங்களுக்கு?
ஒவ்வாமை
ஒருசிலருக்கு அத்திப்பழத்தை சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படக்கூடும். அது தெரியாமல் சாப்பிடுவிட்டால், அரிப்பு, வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்னைகள் தோன்றக்கூடும். அதனால் குறிப்பிட்ட உணவுமுறைக்கு மாறும்போது மருத்துவர்களிடம் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. மேலும் இதில் நிறைய நார்ச்சத்து இருப்பதால், அதிகம் சாப்பிடக்கூடாது. அப்புறம் கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்படக்கூடும்.