வெந்தய விதையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதனால்தான் அவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மருத்துவ குணங்கள் பல உடல்நல பிரச்சனைகளை குறைக்கிறது. இது முடி வளர்ச்சி, செரிமானம் முதல் எடை இழப்பு மற்றும் நீரிழிவு நோய் வரை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க தினமும் எவ்வளவு வெந்தயத்தை உட்கொள்ள வேண்டும்..?
வெந்தயத்தை அதிகமாக உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கடுமையாகக் குறைக்கும். அதனால்தான் அவை சரியான அளவுகளில் பயன்படுத்தப்பட வேண்டும்.