Health Tips : 40 வயசுக்கு பிறகு 'கட்டாயம்' இதை சாப்பிடனும்; நோய்களை தடுக்கும் நிபுணர்கள் சொல்லும் உணவுகள்!!

Published : Nov 05, 2025, 10:51 AM IST

உங்களுடைய 40 வயதிற்குப் பின் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் முதுமையில் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதை நிபுணர்கள் தெளிவாக விளக்குவதை இங்கு காணலாம்.

PREV
18
Foods for 40s

நம்முடைய ஆரோக்கியத்தை நன்றாக பராமரிப்பது தான் நாம் நேசிக்கும் நபர்களுக்கு செய்யும் மிகப் பெரிய உதவியாகும். நம்மைக் குறித்து அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. பெற்றோருக்கு வயதாகும்போது குழந்தைகள் அவர்களை நினைத்து வருந்துவார்கள். அதைத் தடுக்க முதுமையிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகாதவண்ணம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்தப் பதிவில் உங்களுடைய 40 வயதிற்குப் பின் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் முதுமையில் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதை காணலாம்.

28
Healthy Aging Guide

நாம் உண்ணும் உணவில் எப்போதும் அலட்சியம் காட்டக் கூடாது. அப்படி செய்தால் நீரிழிவு, இதய நோய், புற்றுநோய், மூட்டு வலி ஆகிய நோய்கள் வரக்கூடும். இதற்கு தீர்வு ஆரோக்கியமான உணவுகளை அளவாக உண்பதுதான். நீங்கள் 40 வயதைக் கடந்தவர் என்றால் தினமும் உணவில் தக்காளி சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் உள்ளன. இதில் உள்ள லைகோபீன் என்ற ஆற்றல்வாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும். தக்காளியை சூப்பாக குடிக்கலாம்.

38
சர்க்கரை வள்ளிக்கிழங்கு

முதுமையில் ஏற்படும் பார்வை குறைபாட்டை தவிர்க்க சர்க்கரை வள்ளிக்கிழங்கை அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம். வாரத்தில் 3 நாட்கள் வரை எடுக்கலாம். இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம், பீட்டா கரோட்டின், பைட்டோ கெமிக்கல்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

48
முட்டை

40 வயதைக் கடந்தவர்கள் சாப்பிடவேண்டிய இன்னொரு முக்கியமான உணவு முட்டை. நாள்தோறும் ஒரு வேகவைத்த முட்டையை உண்ண வேண்டும். அதிக புரதச்சத்திற்கு முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி, வெள்ளைப் பகுதியை மட்டும் உண்ணலாம். முட்டை உண்பதால் உடலின் தசைகளை மீட்சியடையும்; உடலுக்குத் தேவையான ஆற்றலும் கிடைக்கும். எலும்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

58
காளான்

வாரத்தில் இரண்டு முறை காளான்கள் உண்ணலாம். இதில் கால்சியம், வைட்டமின் டி அதிகம் உள்ளது. எலும்புகளை உறுதியாக்கும். மூளையின் செயல்திறனை மேம்படுத்தும்.

68
ஆப்பிள்

நாள்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. மாரடைப்பைத் தடுக்க, செரிமானப் பிரச்சனையை தவிர்க்க ஆப்பிள் உதவும். இதில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.

78
பாதாம்

இரவில் தண்ணீரில் ஊறவைத்த ஒரு கைப்பிடி பாதாம் பருப்பு நாள்தோறும் உண்ணலாம். எடை குறைய நினைப்பவர்கள் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பாதாம் மன அழுத்தம், பதட்டம் குறைய உதவும். மூட்டு வலி, வீக்கத்தைய் தடுத்து நிவாரணம் அளிக்கும்.

88
Health Tips

துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக சர்க்கரை கலந்த உணவுகள், பதப்படுப்பட்ட உணவுகள், எண்ணெய் அதிகம் சேர்த்த பொரித்த உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் மேம்படும். தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories