முடி நீளமாக அடர்த்தியாக வேண்டுமா? அப்போ உணவுகளை சாப்பிடுங்க...!!!

First Published | Apr 29, 2023, 9:07 PM IST

முடி அடர்த்தியாக வளர ஆரோக்கியமான உணவு அவசியம். எனவே இப்பதிவில் எந்த மாதிரியான உணவுகள் சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவும் என்பதை இப்பதிவில் காணலாம்...

ஒவ்வொரு பெண்களும் தனக்கு நீளமான, அடர்த்தியான, கருமையான முடி வேண்டும் என்று ஆசைப்படுவர். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் முடி உதிர்தல் பிரச்சனையால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சிலர் முடி வளர்ச்சிக்கு பிற தயாரிப்புகளை பயன்படுத்துகின்றனர்.

சரியான முடி பராமரிப்பு இல்லாதது, மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவு, பொடுகு தொல்லை, வைட்டமின்கள் குறைபாடு போன்ற பல காரணங்களால் முடி வலுவிழந்துவிடுகிறது. முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான உணவு மிகவும் அவசியம். எனவே முடி வளர்ச்சிக்கு உதவும் சத்தான  உணவுகளை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

கீரை:

கீரை வைட்டமின்களின் களஞ்சியமாகும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளது. எனவே கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் முடியின் ஆரோக்கியம் மேம்படும். முடி நீளமாகவும் வளரும். பசலைக் கீரை முடியை ஆரோக்கியமாக வைப்பது மட்டுமின்றி முழு உடலையும் ஆரோக்கியமாக வைக்கிறது. 

Latest Videos


இனிப்பு உருளைக்கிழங்கு:

இனிப்பு உருளைக்கிழங்கு நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த இனிப்பு உருளைக்கிழங்கு சத்துக்களும் நிறைந்தது. இவற்றில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. எனவே அவை முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இனிப்பு உருளைக்கிழங்கு சாப்பிடுவது உங்கள் தலைமுடி நன்றாக வளரும்.

முட்டைகள்:

முட்டை ஒரு முழுமையான காலை உணவு. தினமும் காலை ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். முட்டையில் புரதம், பயோட்டின் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை முடி உதிர்வை குறைத்து முடி வளர்ச்சி அடைய உதவுகிறது.
 

பெர்ரி:

பெர்ரிகளும் ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இந்த பழங்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சரும பிரச்சனைகள் குறையும். இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உங்கள் முடி வளர்ச்சிக்கு உதவும்.

பாதாம் மற்றும் வால்நட்ஸ்:

தினமும் பாதாம், வால்நட்ஸ் போன்ற பருப்புகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இது ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடும் நீங்க உதவுகிறது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை உங்கள் முடி வளர உதவும். எனவே இவற்றை தினமும் சாப்பிடுவது நல்லது.

அவகேடோ:

அவகேடோ பழம் சாப்பிட்டால் முடி ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் முடி நீளமாக வளரும்.

click me!