Dry Eyes Remedies at Home: இப்போதெல்லாம் எல்லோருடைய கையிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. சிலர் பாதி நாள் அதில் மூழ்கி இருக்கிறார்கள். ஆனால், இந்த பழக்கம் உங்கள் கண்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, கண்கள் வறண்டு போகும் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
ஸ்மார்ட்போன் இப்போது நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஆபீஸ் வேலை, படம் பார்ப்பது, சோஷியல் மீடியா எனப் பலரும் அதிக நேரத்தை இதில் தான் செலவிடுகிறார்கள். ஆனால், நீண்ட நேரம் மொபைல் அல்லது லேப்டாப் ஸ்கிரீனைப் பார்ப்பது கண்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் கண் சிமிட்டுவதும் குறையும். கண்களில் உள்ள இயற்கையான ஈரப்பதம் குறைய ஆரம்பித்து, கண்கள் வறண்டு போவது, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
24
முக்கிய காரணம் என்ன?
சாதாரணமாக ஒரு நிமிடத்திற்கு 15-20 முறை நாம் கண் சிமிட்டுவோம். ஆனால், மொபைல் பயன்படுத்தும்போது கண் சிமிட்டுவது ரொம்பவே குறைந்துவிடுகிறது. இதனால், சிறிது நேரத்திலேயே கண்களில் வறட்சி ஏற்படத் தொடங்குகிறது. தொடர்ந்து ஸ்கிரீனைப் பார்ப்பதால், பார்வை மங்குவது, கண் வலி, தலைவலி போன்ற பிரச்சனைகளும் அதிகமாகலாம். இப்போதெல்லாம் குழந்தைகளிடமும் இந்தப் பிரச்சனை அதிகமாகக் காணப்படுகிறது.
34
இந்த பழக்கங்களை மாத்திக்கோங்க!
கண்களின் ஆரோக்கியத்திற்கு '20-20-20' விதியைப் பின்பற்றலாம். அதாவது, ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும், 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை 20 விநாடிகளுக்குப் பார்க்க வேண்டும். மொபைல், லேப்டாப் பயன்படுத்தும்போது, அதை கண்களிலிருந்து கொஞ்சம் தள்ளி வையுங்கள். ஸ்கிரீன் பிரைட்னஸை சரியாக வைத்துக்கொள்ளுங்கள். இருட்டில் அதிக நேரம் மொபைல் பார்ப்பதைத் தவிர்க்கவும். ஆரோக்கியமான கண்களுக்கு நல்ல தூக்கம், போதுமான தண்ணீர், மற்றும் கண் பயிற்சிகள் அவசியம்.
கண் எரிச்சல், தொடர்ந்து கண்ணீர் வருவது, மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகள் இருந்தால், தாமதிக்காமல் உடனடியாக ஒரு நிபுணரிடம் ஆலோசனை கேளுங்கள். இது உங்கள் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.