கிரீன் டீ குடிக்கிறப்ப இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!! அப்புறம் நன்மைக்கு பதிலா உடம்புக்கு பாதிப்பு வரும்!!

First Published Jun 1, 2023, 7:56 AM IST

Green tea: கிரீன் டீ குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் கிரீன் டீ தயாரிக்கும்போது சில தவறுகளை செய்தால் மோசமான பாதிப்புகளை சந்திப்பீர்கள். 

சில சுகாதார நிபுணர்கள் காலையில் எழுந்தவுடன் கிரீன் டீ குடிக்க பரிந்துரைக்கிறார்கள். இது உடலை புத்துணர்வாக வைத்திருக்கும் என நம்பப்படுகிறது. சிலர் உடல் எடையை கட்டுக்குள் வைக்க கிரீம் டீ குடிப்பார்கள். கிரீன் டீயில் உள்ள சில பண்புகள் உடலுக்கு நன்மைகளைத் தருகின்றன. ஆனால் சில தவறுகள் கிரீன் டீயின் நல்ல பண்புகளை அழிக்கின்றன. இதனால் உடலில் சில பிரச்சனைகள் ஏற்படும். 

வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லதல்ல. கிரீன் டீயில் உள்ள டானின்கள் வயிற்றில் எரிச்சல், அஜீரணத்தை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வாயு, அசிடிட்டி, செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆகவே வெறும் வயிற்றில் க்ரீன் டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். காலை உணவுக்குப் பின்னர் அல்லது சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு கிரீன் டீ குடிக்கலாம். 

அடிக்கடி கிரீன் டீயை உட்கொள்வது நல்லதல்ல. அதிகப்படியான கிரீன் டீ குடிக்கும்போது அதில் இருக்கும் காஃபின் அமைதியின்மை, அதிக இதயத் துடிப்பு, தூக்கமின்மை ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடல் எடையை குறைக்க கிரீன் டீயை நீங்கள் குடித்தால், அதை கொஞ்சம் தான் அருந்த வேண்டும். 

இரவில் கிரீன் டீ குடிப்பது உங்கள் தூக்கத்தை பாதிக்கும். இதில் உள்ள காஃபின் உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். உங்களை ஓய்வெடுக்க விடாது. ஒரே இரவில் இந்த பழக்கத்தை கைவிடுவதும் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இரவு சாப்பிட்ட பின்னர் கிரீன் டீ அருந்த வேண்டாம். அதில் உள்ள டானின், உணவில் உள்ள சத்துக்களை ஜீரணிக்க உதவாது. உங்கள் உடலுக்குள் டானின் சென்றால் உங்கள் உடலில் இருக்கும் துத்தநாகம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துகள் சரியாக உறிஞ்சப்படாது. இதனால் இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

click me!