இனிப்பா சாப்பிடனும் போல இருக்கா? டிமென்ஷியா என்ற மறதி நோய் அறிகுறியா கூட இருக்கலாம், எச்சரிக்கையா இருங்க..!

First Published Mar 27, 2023, 10:08 AM IST

Dementia symptoms: அதிகமாக இனிப்பு சாப்பிட தோன்றுவது டிமென்ஷியா எனும் மறதி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

ஞாபக மறதி எல்லோருக்கும் இருக்கின்ற பிரச்சனை தான். இருப்பினும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  ஏற்படுகின்ற டிமென்சியா என்ற ஞாபக மறதி மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிடும். உலகமெங்கும் உள்ள மக்களில் இந்த நோய் 5 கோடி பேருக்கு மேல் இருக்கிறது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களின் உதவியை நாட வேண்டியிருக்கும். 

மூளையின் முன்பகுதி, டெம்போரல் லோப்களில் உள்ள நியூரான்கள் சேதமடைவதால் இந்த நோய் வருகிறது. பொதுவாக 40 முதல் 60 வயதுடையவர்களை அதிகம் பாதிக்கிறது. ஃப்ரண்டோடெம்போரல் டிமென்ஷியாவில் 2 வகைகள் உள்ளன. அவை, ஃப்ரண்டோடெம்போரல் டிமென்ஷியா நடத்தை மாறுபாடு (bvFTD), முதன்மை முற்போக்கான அஃபாசியா (PPA). 

ஃப்ரண்டோடெம்போரல் டிமென்ஷியா என்ற வகையான நோயில், முக்கிய அறிகுறியாக இனிப்பு உணவுகளை விரும்புவது கூறப்படுகிறது. இனிப்பு  உணவு அல்லது பானம் ஆகியவை சாப்பிடுவதும் முக்கிய அறிகுறியாகும். இந்த நோய் பாதித்தால் அதிகமாக சாப்பிடலாம் அல்லது அதிகமாக மது அருந்தலாம். இந்த மாற்றங்களைத் தவிர, வேறு சிலவும் உள்ளன. பிடித்த விஷயங்களில் கூட ஆர்வமின்மை,  பொருத்தமற்ற நடத்தை இதில் அடங்கும். அதாவது பிறர் மேல் வரும் பச்சாதாபம் குறைதல், பணிகளில் கவனம் செலுத்துவதில் சிரமம், வெறித்தனமான நடத்தை, திட்டமிடல், ஒழுங்கமைத்தல், முடிவெடுப்பதில் சிரமம் ஆகியவை அடங்கும். இது எல்லாம் ஃப்ரண்டோடெம்போரல் டிமென்ஷியா நடத்தை மாறுபாடு தொடர்புடைய அறிகுறிகள். 

முதன்மை முற்போக்கான அஃபாசியா வகை நடத்தையை விட (behaviour) உங்கள் மொழியை பாதிக்கிறது. அதாவது, வார்த்தைகளை நினைவில் கொள்வதில் சிரமம், எதையும் கண்டுபிடிப்பது அல்லது புரிந்துகொள்வது சிரமம். சரியான வார்த்தையைத் தேடுவதையோ, நடு வாக்கியத்தில் பேசுவதையோ கூட நிறுத்தலாம். 
 

டிமென்ஷியாவிற்கு எந்த சிகிச்சையும் இல்லை. ஆனாலும் சில அறிகுறிகளை கட்டுக்குள் வைக்க சிகிச்சை உள்ளது. பிசியோதெரபி இந்த நோய் சிக்கல்களுக்கு உதவலாம், பேச்சு சிகிச்சை உங்கள் தொடர்பு திறன்களை மேம்படுத்தலாம். 

இதையும் படிங்க: கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழத்தை ஒதுக்கக் கூடாது.. அந்த பழம் 1 சாப்பிட்டால்.. இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்.!

இந்த நோய் வராமல் தடுக்க, வயதான காலத்தில் தனிமையை தவிர்க்க வேண்டும். இது டிமென்சியாவில் இருந்து காக்கலாம். உடற்பயிற்சி, தோட்டப்பராமரிப்பு, வீட்டு வேலை ஆகியவற்றில் பிஸியாக இருப்பவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு குறைவாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் உங்கள் மத்திம வயதில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வீட்டில் முதியவர்கள் இருந்தால் அவர்களுக்கு ஆதரவாக இருங்கள். 

இதையும் படிங்க: தர்பூசணியை இந்த 1 பொருளுடன் சேர்த்து சாப்பிட்டால்... ரெண்டு மடங்கு நன்மை கிடைக்கும்.. நிபுணர் சொல்றத கேளுங்க!!

click me!