சீரகம் நல்லதுனு நினைச்சுருப்பீங்க.. ஆனா ரொம்ப சேர்த்துகிட்டா இந்த பக்க விளைவுகள் வருமாம்...!

Published : Apr 05, 2023, 12:30 PM IST

சீரகம் பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்டிருந்தாலும் அதனை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.   

PREV
17
சீரகம் நல்லதுனு நினைச்சுருப்பீங்க.. ஆனா ரொம்ப சேர்த்துகிட்டா இந்த பக்க விளைவுகள் வருமாம்...!

cumin seeds side effects in tamil: நாம் தொடர்ந்து சீரகத்தை சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் ஆவியாகவும் பண்பு கொண்ட எண்ணெய் நம்முடைய கல்லீரல், சிறுநீரகத்தில் பாதிப்பை உண்டாக்குமாம். அதனால் சீரகத்தை அளவாகவே பயன்படுத்த வேண்டும்.

27

வயிற்று பிரச்சனைகள் 

சீரகத்தை சாப்பிடும்போது வாயு சார்ந்த பிரச்சனைகள் குணமாகின்றன. ஆனாலும் செரிமான பிரச்சனைகளுக்கு சீரகம் காரணமாக அமைவதாக சொல்லப்படுகிறது. அதிகமான சீரகம் எடுத்து கொண்டால் நெஞ்சு எரிச்சலுக்கும் இது வழிவகுக்கும். சீரகத்தில் கார்மினேட்டிவ் இருப்பதால் அடிக்கடி ஏப்பம் வர செய்யும். இதனால் வினோத சத்தம் கூட ஏற்படலாம். அதனால் உங்களுக்கு வீண் சங்கடம் தானே. 

37

ரத்த அழுத்தம் 
சீரகத்தை அதிகரித்துக் கொண்டால் ரத்த அழுத்தத்தில் மாற்றங்கள் ஏற்படும். அதனால் தான் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் இரண்டு வாரத்திற்கு முன்பாகவே சீரகத்தை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். 

47

கர்ப்பிணிகள் 

தங்களுடைய கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக சீரகத்தை சாப்பிட்டு வந்தால் கருச்சிதைவு கூட ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. வயிற்றில் கருவை சுமக்கும் பெண்கள் உணவில் சீரகத்தை கொஞ்சமாக தான் சேர்க்க வேண்டும். மருத்துவரிடம் இது குறித்து ஆலோசனை கேட்ட பிறகு சீரகத்தை தொடர்ந்து உண்ணுவதை கர்ப்பிணி பெண்கள் பின்பற்றுவது நல்லது.

இதையும் படிங்க: வைட்டமின் C-க்கு இவ்ளோ நன்மைகள் இருக்கா! அதுவும் கோடையில் உடல் சூட்டை விரட்டி, நோய் எதிர்ப்பு சக்தி தரும்!

57

மனப்பிறழ்வு 

சீரகத்தில் போதையை கொடுக்கும் பொருள்கள் இருப்பதால் அளவாக தான் பயன்படுத்த வேண்டும். சீரகத்தை தொடர்ந்து உண்ணும் போது மயக்கம், மனப்பிறழ்வு, குமட்டல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். அதிகமாக சீரகத்தை உணவில் சேர்ப்பதால் மாதவிடாய் சுழற்சியின் போது பெண்களுக்கு இரத்தப்போக்கு அதிகம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. 

67

அதிகமாக சீரகம் உண்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்காது. நீரிழிவு நோயாளிகளை பொறுத்தவரை ரதத்தில் சர்க்கரை அளவு சீராக இல்லாவிட்டால் அது மரணத்தை கூட ஏற்படுத்தி விடும். அதிகப்படியான சீரகம் உட்கொள்ளல் ரத்தத்தில் சர்க்கரை அளவை பாதியாக குறைக்கும். 

 

77

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் உணவில் சீரகம் அதிகமாக சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் அதிகப்படியான சீரகம் உட்கொள்ளல் தாய்ப்பால் சுரப்பை குறைக்கும். 

நாம் சீரகத்தை உணவில் இருந்து முற்றிலும் தவிர்ப்பதற்கு பதிலாக அதை அளவாக பயன்படுத்தினால் அதனுடைய நன்மைகளை பெற முடியும். எந்த பொருளும் அளவுக்கு மீஞ்சினால் நஞ்சு என்பதுதான் சீரகத்திற்கும் பொருந்தும். அதை அளவோடு எடுத்துக் கொண்டால் பலன் பெறலாம். 

இதையும் படிங்க: கருஞ்சீரகத்தில் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்போது, 1 ஸ்பூன் கூட சாப்பிடாம இருக்கலாமா??

click me!

Recommended Stories