தேங்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை குறித்து நம்மில் பலருக்கும் ஓரளவுக்கு தெரியும். ஆனால் இந்த பானம் பெண்களின் மாதவிடாய் சுழற்சிக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? உடலைச் சுத்தப்படுத்த மட்டுமின்றி, பல்வேறு வகையில் கழிவுகளை வெளியேற்றவும் இளநீர் பயன்படுகிறது. நோய்த்தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்கவும் கூடிய பண்புகள் இளநீரில் காணப்படுகிறது.
மாதவிடாய் காலத்தில் இளநீரை குடிப்பது பெண்களுக்கு மாதவிடாய் வலியைக் குறைத்து, மாதவிடாய் சுழற்சியை சீரான முறையில் பராமரிக்க உதவுகிறது. மேலும் சிறுநீரக கற்களைத் தடுக்கவும், மனிதனின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதற்கான பண்புகளும் இளநீரில் இடம்பெற்றுள்ளன.