நன்மைகள் பல...!
தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்வதால் உடலில் சூட்டு கொப்பளங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். நல்ல தூக்கம் கிடைப்பதால் குறட்டையை தவிர்க்க முடியும். முழங்கால் வலி, மூட்டு வலிகள் இந்த மசாஜ் செய்வதால் குணமாகிறது.
இப்படி மசாஜ் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது. கடுகு எண்ணெய் நல்லெண்ணெய் ஆகியவையும் உங்களுடைய பாதங்களில் மசாஜ் செய்ய ஏற்றவை. ஒவ்வொரு காலின் பாதங்களிலும் குறைந்தது மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.