பிரம்மச்சாரியா இருக்கும் பெண்கள்.. அதற்கு சொல்லும் நூதன காரணங்கள்.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!

First Published | May 25, 2023, 8:11 PM IST

இந்த காலகட்டத்தில் சில பெண்கள் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க விரும்புகிறார்கள். அதற்கென அவர்கள் சொல்லும் காரணங்கள் உள்ளே... 

பிரம்மச்சரியம் என்றால் துறவு மனநிலை மட்டுமல்ல, அதுவொரு வாழ்க்கை முறையும் கூட. இந்த மனநிலை கொண்டோர் உடலுறவு கொள்வதைத் தவிர்க்கிறார்கள். தங்களைத் தாங்களே மீண்டும் அறியவும், புதுப்பித்துக் கொள்ளவும் நினைக்கிறார்கள். இப்படி இருக்க நினைக்கும் ஒருவருக்கு அசாத்திய தைரியம், உறுதிப்பாடு, மன உறுதி வேண்டும். இங்கு சில பெண்கள் சொல்லும் காரணங்கள் தெரிந்து கொள்ளுங்கள். 

ஓவரா போகுது! 

உடலுறவில் மட்டுமே நாட்டம் சென்றதால் பிரம்மச்சரியத்தை தேர்வு செய்த பெண் சொன்னது..." நான் உடலுறவில் ஈடுபட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. என்னால் எந்த உறவிலும் தீவிரமாக இருக்க முடியவில்லை. உணர்ச்சி ரீதியான பிணைப்பு மீது எனக்கு எந்த உணர்வும் இல்லை. ஒவ்வொரு முறை நான் ஒருவரிடம் நெருங்கும்போதும் அவருடன் உடலுறவு கொள்ள மட்டுமே ஆர்வம் இருக்கிறது. எந்த ஆழமான உரையாடல்களையுமே நான் வெறுத்தேன். அதன் பிறகு தான் முடிவு செய்தேன். இனி உடலுறவு மீது நாட்டம் கொள்வதை நிறுத்த வேண்டும் என.. இதனால் நான் பல உறவுகளை இழந்திருப்பதை புரிந்து கொண்டேன்"என்றார். இவருக்கு வயது 35. 


கட்டுப்பாடுகளால் கலைந்த காம உணர்வு!!

மத நம்பிக்கைகளினால் பிரம்மச்சரியம் தேர்வு செய்த பெண் சொல்வது.." நான் வளர்ந்தது மத நம்பிக்கைகள் கொண்ட பழமைவாத குடும்பத்தில் தான். ஆண்களுடன் டேட்டிங் செய்யும் எண்ணம் அதனால் பெரிய அளவில் உண்டாகவில்லை. எப்போதும் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது எப்படி என்பதை அறிய ஆவல் இருந்தது. ஆனால் சூழல் அமையாததால் திருமணம் வரை உடலுறவில் இருந்து விலகியிருந்தேன். என்னுடைய கட்டிப்பெட்டித்தனமான குடும்பத்தில் இருந்து நான் ஒரு பாடத்தை கற்று கொண்டேன். திருமணம் வரை உடலுறவு கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தேன். திருமணத்திற்குப் பிறகு மட்டுமே உடலுறவை அனுபவிக்க விரும்பினேன். எனது கலாச்சாரம், குடும்பப் பின்னணியால் எனது விருப்பங்களும் தேர்வுகளும் ரொம்பவே பாதிக்கப்பட்டன"என்றார். இந்த பெண்ணுக்கு வயது 29. 

பிரிவுகளின் பயம்

இழப்பின் மீதான பயத்தில் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கும் பெண்.." உடலுறவு வைத்துக் கொள்வதற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கும் போது என்னுடைய மற்ற நண்பர்களை நான் இழக்க நேரிட்டது. நான் ஒரு ஆணிடம் அதிக நேரம் செலவிட்டு அவருக்கு முன்னுரிமை அளித்தேன். உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எனது விருப்பம், என் வாழ்க்கையில் மிக முக்கியமான நபரை இழக்க காரணமாகிவிட்டது. என்னுடைய நெருங்கிய தோழியின் நம்பிக்கையை பெறுவதற்காகவாது சில காலம் உடலுறவு இல்லாமல் இருக்க வேண்டும் என நினைத்தேன். இப்போது மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன"என்றார். அடக் கடவுளே!!

ஒரு 27 வயது பெண் தன்னுடைய வாழ்க்கையில் பிரம்மச்சரியம் கடைப்பிடிப்பதை ஏன் என சொல்கிறார்.."பாலியல் எண்ணங்களால் மட்டுமே நிறைந்திருந்த என்னுடைய மனதை கட்டுப்படுத்த ஆசைப்பட்டேன். பொதுவாக எனக்கு உடலுறவில் அவ்வளவாக நாட்டமில்லை. ஆனால் என் சிந்தனைகள் அப்படியில்லை. நெருங்கமான ஒருவருடன் இருக்கும் போது அந்த மாதிரியான விருப்பமும் ஆசையும் என் சிந்தனையில் நிரம்பி இருந்தது. ஆனாலும் நான் அதை கட்டுப்படுத்த நினைத்தேன். இப்போது இரண்டு ஆண்டுகளாக நான் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை. இப்போது ஒருவருடன் தீவிரமான உறவில் இருக்கிறேன். ஆனால் நாங்கள் இன்னும் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை"என்றார். 

Latest Videos

click me!