Lavender Oil: இரவில் தூக்கம் வரவில்லையா? இந்த எண்ணெயைப் பயன்படுத்திப் பாருங்கள் !

Published : Feb 23, 2023, 01:16 PM IST

பல வகையான எண்ணெய் வகைகள் இருப்பினும், பலரும் அறிந்திராத ஒரு எண்ணெய் வகையைப் பற்றித் தான் இந்தப் பதிவில் காணப் போகிறோம். 

PREV
17
Lavender Oil: இரவில் தூக்கம் வரவில்லையா? இந்த எண்ணெயைப் பயன்படுத்திப் பாருங்கள் !

நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் எண்ணெய் வகைகளில் சில பழக்கமான எண்ணெய் என்றால் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் போன்றவை தான். சுத்தமான தரமான எண்ணெயைப் பயன்படுத்துவது, நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரும். ஆனால், இப்போது கடைகளில் கிடைக்கும் எண்ணெயில் கலப்படம் இருப்பதால், முடிந்த அளவிற்கு செக்கு எண்ணெய் வாங்கி உபயோகிப்பது தான் மிகவும் நல்லது. பல வகையான எண்ணெய் வகைகள் இருப்பினும், பலரும் அறிந்திராத ஒரு எண்ணெய் வகையைப் பற்றித் தான் இந்தப் பதிவில் காணப் போகிறோம். 

27

லாவெண்டர் எண்ணெய்

அழகிய ஊதா நிறத்தில் பல்வேறு அரிய நன்மைகளைத் தரக் கூடிய லாவெண்டர் எண்ணெய் பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா? இந்த லாவெண்டர் எண்ணெயானது பல விஷயங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த எண்ணெய் எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று தெரிந்து கொண்டால், நிச்சயமாக உடனே வாங்கிப் பயன்படுத்த தொடங்கி விடுவீர்கள். அதில் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். இந்த எண்ணெயின் மிகப்பெரிய பலம் என்றால், அது இதன் நறுமணம் தான். நல்ல நறுமணத்தின் தன்மையால், பலரும் இதனை எளிதில் அடையாளம் கண்டு கொள்வர்.

37

தலைவலிக்கு நிவாரணம்

தலைவலி ஏற்படும் போது ஒரு துளி லாவெண்டர் எண்ணெயை நெற்றியில் தேய்த்து, மெதுவாக மசாஜ் செய்தால் வலி நீங்கும்.
 

47

மன அழுத்தம் குறையும்

பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கும் பண்புகள் லாவெண்டர் எண்ணெய்க்கு உண்டு.
 

57

முகப் பொலிவு

லாவெண்டர் எண்ணெயை மொய்ஸ்சரைசருடன் கலந்து முகத்தில் தடவி வந்தால், முகம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். அதோடு முகப் பருக்களும் வராது.

67

தூக்கம் வரும்

தூங்குவதற்கு முன்பாக தலையணையின் இருபுறமும் 2 துளி லாவெண்டர் எண்ணெயை விட்டு தூங்கினால், அதன் வாசனை நமக்கு நிம்மதியான தூக்கத்தை அளிக்கும். 

77

நறுமணம்

லாவெண்டர் எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுவது மட்டுமின்றி, நறுமணப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெயின் வாசனை அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை பெற்றது. ஆகையால் சோப்பு மற்றும் சோப் ஆயில் தயாரிப்பில் நறுமணம் அளிக்க பயன்படுகிறது.

லாவெண்டர் எண்ணெயில் பல நன்மைகள் இருந்தாலும், இதனையும் அளவோடு தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால், நமக்கு தான் பாதிப்புகள் உண்டாகும்.

click me!

Recommended Stories