சைக்கிள் ஓட்டுதல் என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, அது உடல் மற்றும் மன ரீதியாக பல நன்மைகளை நமக்கு வழங்குகிறது. தசைகளை வலுப்படுத்தும், மன அமைதியை தருகிறது உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவும் உள்ளிட்ட ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. எனவே, இந்த பதிவில் தினமும் வெறும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
26
எடை இழப்புக்கு
சைக்கிள் ஓட்டுதல் என்பது எரோபிக் பயிற்சி. இது இதயம், நுரையீரல், தசைகளை மேம்படுத்த உதவுகின்றன. குறைந்த தாக்கம் கொண்ட இந்த பயிற்சியானது, மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாது. முக்கியமாக அனைத்து வயதினருக்கும் பயனுள்ள மற்றும் பாதுகாப்பான உடற்பயிற்சியாக இது அமைகிறது.
36
கலோரிகள் எரிக்கப்படுகின்றன :
தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் சுமார் 200 முதல் 500 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. அதுவே ஒரு மாதத்திற்கு என்றால் சுமார் 9000 கலோரிகள் எரிக்கப்படும். அதாவது சுமார் ஒரு கிலோ கொழுப்பு குறைவதற்கு இது சமம்.
தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் இதய ஆரோக்கியம் மேம்படும். அதாவது சைக்கிள் ஓட்டுதல் இதய துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இதனால் இதயம் திறமையாக செயல்படும்.
மன ஆரோக்கியம் ;
மன ஆரோக்கியமாக இருப்பதற்கு சைக்கிள் ஓட்டுதல் மிகவும் நல்லது. சைக்கிள் ஓட்டுதல் அதிகளவு மகிழ்ச்சியான ஹார்மோன்களான எண்டோர்பின்களை வெளியிடும். இதனால் மன அழுத்தம் பதட்டம் குறையும்.
56
பிற நன்மைகள் ;
- தினமும் சைக்கிள் ஓட்டினால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
- தினமும் சைக்கிள் ஓட்டுதல் தசைகளை வலுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.
- இதய நோய் போன்ற நாள்பட்ட நோயின் அபாயத்தை குறைக்க உதவும்.
66
நினைவில் கொள் ;
- தசைகள் சேதமடைவதை தவிர்க்க கூல் டவுன் மற்றும் வார்ம் அப் பயிற்சி கண்டிப்பாக செய்யவும்.
- தொடர்ந்து சைக்கிள் ஓட்டினால் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். இதனால் உடலின் செயல் திறன் அப்படியே இருக்கும்.
- எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்ட வேண்டும் . இதனால் எடை குறைவது மட்டுமல்ல, மன நிலையும் மேம்படும். அதுபோல ஆரம்பத்தில் 10-15 நிமிடங்கள் முதலில் செய்யவும். பிறகு படிப்படியாக சைக்கிள் ஓட்டும் நேரத்தை அதிகரிக்கவும்.