dry ginger or sukku Benefits tamil: இஞ்சி உண்பதால் செரிமான கோளாறுகள் நீங்கும். அசைவ உணவுகளின் சுவையை கூட்டுவதோடு, அதன் ஜீரணத்திலும் இஞ்சி பெரும்பங்காற்றுகிறது. இஞ்சி டீயை விரும்பாதவர்களும் வெகுசிலர் தான். ஆனால் இஞ்சியை விட சுக்கின் நன்மைகள் நன்மைகள் அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். சுக்கில் பல மருத்துவ நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன.
நம் சமையலறையில் இருக்கும் ஒவ்வொரு மசாலாவும் நன்மை செய்யக் கூடியது தான். அந்த வரிசையில் சுக்கு ரொம்ப நல்லது. இதனை உலர் இஞ்சி என்றும் அழைப்பர். இஞ்சியை காயவைத்து பின்னர் அரைத்து சுக்குத்தூள் தயாரிக்கப்படுகிறது. சுக்கு நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
செரிமானம் மேம்படும்!
சுக்கு நம்முடைய செரிமானத்திற்கு மிகவும் நல்லது. இதில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. உடலின் நச்சு நீக்கியாக செயல்படும் திறன் கொண்டது சுக்கு. அஜீரண பிரச்சனை உள்ளவர்கள், காலையில் மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் சுக்கு நீர் பருகலாம். இது நமது வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, இது வயிற்றில் இருக்கும் செரிமான திரவத்தை நடுநிலையாக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி கூடும்! தொற்றுநோயை எதிர்த்துப் போராட நமது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்க வேண்டும். அப்படியில்லாமல், பலவீனமாக இருந்தால், எந்தவொரு தொற்றுநோயும் எளிதில் நம்மை தாக்கும். சுக்கில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதைப் பயன்படுத்துவதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுகிறது.
சளி, காய்ச்சல் எதிர்ப்பு
ஜலதோஷம், இருமல் இருக்கும்போது நாம் அனைவரும் இஞ்சி டீ அருந்துவோம். அதற்கு பதில் சளி மற்றும் இருமலில் சுக்கு பொடி அதிக நன்மை பயக்கும். வெதுவெதுப்பான நீரில் சுக்கு பொடி கலந்து குடிப்பதால் சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் குணமாகும். சுக்கின் முழுப் பலனையும் பெற, அதன் கஷாயத்தைக் குடிக்கலாம்.
இதையும் படிங்க: பேரழகுக்கு ஆசைப்பட்டு.. அடிக்கடி 'வைட்டமின் ஈ' ஆயில் முகத்தில் தடவுகிறீர்களா? அதனால் இவ்ளோ பாதிப்புகள்!
மாதவிடாய் வலி நிவாரணம்
பெண்களுக்கு மாதவிடாய் வலி மிகவும் கொடூரமாக இருக்கும். இந்த வலியில் இருந்து மீள சுக்கு உதவும். சுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் கொண்டுள்ளது. மாதவிடாய் காலத்தில் சுக்கு தண்ணீர் அருந்தலாம். இதனால் உங்களுக்கு வலி குறையும்.
எடை குறையும்
உலர்ந்த இஞ்சி நமது செரிமானத்தை மேம்படுத்தும். உடலில் தேங்கியுள்ள கொழுப்பை எரிக்க உதவும். இது வெப்ப எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்துவதன் மூலம் கொழுப்பு உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்துகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
எதுவும் சரியான அளவில் பயன்படுத்தினால் மட்டுமே நன்மை கிடைக்கும். எந்த மருத்துவ பரிந்துரையையும் இல்லாமல் அளவுக்கு அதிகமாக சுக்கு பயன்படுத்த வேண்டாம். தொடர்ந்து சுக்கு உண்ணும் முன், ஒரு மருத்துவர் அல்லது நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
இதையும் படிங்க: தேங்காய் நார் வைத்து இவ்வளவு விஷயங்கள் செய்யலாம்! இனிமேல் மறந்தும் தூக்கி போடாதீங்க! செம்ம டிப்ஸ்!!