வெறும் தரையில் படுத்து தூங்கினால் பறந்து போகும் முதுகு வலி! இன்னும் நம்ப முடியாத நன்மைகள் இருக்கு!

First Published | May 18, 2023, 12:03 PM IST

வெறும் தரையில் படுத்து தூங்கினால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. 

முற்காலத்தில் மக்கள் இயற்கைக் காற்றை அனுபவிக்க வீட்டு மாடியில் உறங்குவார்கள். வீட்டின் மேற்கூரை சுண்ணாம்புச் சாந்துகளால் கட்டப்பட்டிருக்கும். அங்கு தூங்குவதே அலாதி சுகம் தான். சிலர் வீட்டில் மாடி இருக்காது. வீட்டு முற்றத்தில் பாய் விரித்து உறங்குவார்கள். இப்போது எல்லாம் மாறிவிட்டது. அறைக்குள் மெத்தை அல்லது வெறும் கட்டிலில் தூங்குவது பலருடைய வீட்டிலும் நடப்பதுதான். ஆனால் தரையில் தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா? இதில் பல்வேறு நன்மைகள் உள்ளன. 

இயந்திர உலகில் மனிதன் தன்னை நிதானமாகவும், வசதியாகவும் வைத்திருக்க தரையில் தூங்க வேண்டும். தரையில் உறங்குவதால் முதுகு வலிக்கு நல்லது. 

முதுகு வலி 

தரையில் தூங்குவது முதுகுவலிக்கு நல்லது. உங்கள் முதுகெலும்பு அதன் இயற்கையான நிலைக்கு தன்னைத்தானே மாற்றிக் கொள்ளும். தரையில் உறங்கும்போது உங்கள் உடலைப் பற்றிய அதிக விழிப்புணர்வை நீங்கள் உணரலாம். தரையில் தூங்கும்போது, ​​உங்கள் முதுகு காட்டியபடி அல்லது வயிற்றை ஒட்டியபடி தூங்குங்கள். 

சிலருக்கு தரையில் படுக்க தொடங்கும் காலத்தில் இடுப்புப் பகுதியில் வலி அல்லது கடுப்பு இருக்கலாம். இது சில நாட்களுக்கு உணரப்பட்டாலும், தொடர்ந்து உணரப்படுவதில்லை. பழகிவிடும். 

Latest Videos


நல்ல தூக்கம் 

​​தூக்கமின்மை ஒரு பொதுவான பிரச்சனையாக உருவாகி வருகிறது. பலர் மெத்தையில் படுத்தும் தூக்கம் வரவில்லை என்கின்றனர். தற்போது, ​​தூக்கமின்மையால் அவதிப்படும் நோயாளிகளை, தரையில் உறங்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தத் தொடங்கியுள்ளனர். தரையில் உறங்குவது ஆழ்ந்த உறக்கத்தை அளிக்கிறது. இதன் காரணமாக உடல் ஆரோக்கியமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். 

இயக்கம் 

தரையில் தூங்கும் போது, ​​ஒருவர் முற்றிலும் புரண்டு படுத்து தூங்குகிறார். அவரது கைகள் மற்றும் கால்கள் அவற்றின் இயல்பான இயக்கத்தை காட்டுகின்றன. இது அவரது அமைதியான தூக்கத்தைக் குறிக்கிறது. 

கர்ப்பக்காலம் 

கர்ப்ப காலத்தில் தரையில் தூங்குவது கர்ப்பிணியின் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. பல பெண்கள் தரையில் தூங்குவதற்கு வசதியாக இருந்தாலும், அவர்களுக்கு நல்ல மெத்தையே பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் தரையில் தூங்கும் போது எழுந்து உட்காருவது மிகவும் கடினமாக இருக்கும். 

தோரணையை மேம்படுத்தும் 

தரையில் தலை, கழுத்து வைத்து படுக்கும்போது உங்கள் தோரணை மேம்படும். உங்கள் மெத்தை உங்களுக்கு தூக்கத்தை கொடுக்கவில்லையா? தரையில் தூங்குவது சரியான யோசனையாக இருக்கலாம். இது ஆரம்பத்தில் கொஞ்சம் சங்கடமாக இருக்கலாம், ஆனால் உங்கள் உடல் பழகியவுடன், நீங்கள் தரையில் தூங்குவது மிகவும் வசதியாக இருக்கும். 

முதியவர்கள், மூட்டுவலி இருப்பவர்கள், தரையில் இருந்து எழுந்து நிற்கவே சிரமப்படுபவர்கள்  தரையில் தூங்குவதை தவிருங்கள். 
 

click me!