
ஒரே உணவு இரண்டு முறை வேண்டாம்
பலர் காலையில் வீட்டில் சாப்பிட்ட உணவுப் பொருட்களையே மதிய உணவிற்கு பேக் செய்து எடுத்து வருகின்றனர். இரண்டு முறை ஒரே மாதிரியான உணவை சாப்பிடுவதால் தானாகவே தூக்கம் அழுத்தும். இது உங்கள் வேலைக்கு இடையூறு விளைவிக்கும்.
இதனால் நீங்கள் ஆஃபீஸில் வேலை செய்து கொண்டே தூங்க வேண்டியிருக்கும். உங்கள் முதலாளி பார்த்தால் உங்களுக்கு திட்டுகள் தான் மிஞ்சும். எனவே ஒரே உணவு ஐட்டமை இரண்டு வேளை சாப்பிட வேண்டாம். முக்கியமாக ஆஃபீஸ் பணி நேரத்தில் சாப்பிட வேண்டாம்.
வறுவல்கள், கேக் ஐட்டம்கள் வேண்டாம்
பொதுவாக வறுவல்கள் மிகவும் தாமதமாகவே செரிமானமாகும். குறிப்பாக பிரெஞ்சு ஃப்ரைஸ் போன்ற வறுத்த உணவுகளை சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் செரிமான வேகம் குறைவு. எனவே ஆஃபீஸில் இருக்கும் போது அவற்றை தொடவேண்டாம். தூங்கி கொண்டே வேலை செய்து திட்டுகளை வாங்க வேண்டாம்.
இன்னொரு விஷயம் என்னவென்றால் கேக்குகள், பண்கள் போன்ற பேக்கரி பொருட்களையும் குறைவாக சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் இவை உங்களை தூக்க கலக்கத்திற்கு கொண்டு செல்லும். சோர்வுக்கு ஆளாக்கும். ஆஃபீஸில் இருக்கும் போது சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும் என்பதால் அதிக கொழுப்பு உள்ள இது போன்ற உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
சாப்பாடு சாப்பிட்டால் தூக்கம் வரும்
செரிமான நேரத்தில் அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாக மாறும். குளுக்கோஸுக்கு ஏற்ப இன்சுலின் வெளியிடப்படுகிறது. இது உடலில் செரோடோனின், மெலடோனின் போன்ற ரசாயனங்களின் அளவை அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன்கள் ஓய்வு, தூக்கத்தை ஊக்குவிக்கின்றன.
அதனால்தான் மதிய உணவில் அரிசி சாதம் சாப்பிட்டவர்கள் தூக்க கலக்கத்தால் அவதிப்படுகின்றனர். எங்கு இருந்தாலும் கொட்டாவி விட்டுக் கொண்டே தென்படுவார்கள். நீங்கள் ஆஃபீஸில் அமர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பதால் அரிசி சாதத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக சாப்பிடுகிறீர்களோ அந்த அளவிற்கு நல்லது.
இவற்றை சாப்பிடாமல் இருந்தாலே நல்லது
ஓட்ஸ், அரிசி, தக்காளி, காளான், பிஸ்தா, முட்டை போன்ற உணவுப் பொருட்களில் மெலடோனின் அதிகமாக உள்ளது. எனவே இந்த ஐட்டம்களை சாப்பிட்ட பிறகு ஓய்வு எடுக்க வேண்டும் என்று தோன்றும். எனவே ஆஃபீஸ் பணி நேரத்தில் இது போன்ற உணவுப் பொருட்களை எவ்வளவு சாப்பிடாமல் இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு நல்லது.
ஆஃபீஸ்களில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு தான் அதிகமாக தூக்கம் வரும் வாய்ப்பு உள்ளது. சுற்றி சுற்றி வேலை செய்வது, எடைகளை தூக்கி வேலை செய்பவர்களுக்கு எந்த உணவை சாப்பிட்டாலும் செரிமானத்திற்கு பிரச்சனை இருக்காது.
புரத உணவு
அதிக புரதம் உள்ள உணவை சாப்பிடுவதால் அது உங்களை சோர்வடையச் செய்யும். நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்பினால் புரதம் எடுத்துக்கொள்வது அவசியம். பால், பசலைக் கீரை, விதைகள், சோயா பொருட்கள், கோழி பொருட்களை மதிய உணவு நேரத்தில் எடுத்துக்கொள்வது நல்லதல்ல.
செரிமானம் ஆக அதிக சக்தியை எடுத்துக்கொள்ளும் இந்த உணவுகளால் சோர்வு அதிகரிக்கும். உங்கள் உடலும் ஓய்வை விரும்பும். எனவே ஆஃபீஸ் நேரங்களில் இது போன்ற உணவை எவ்வளவு குறைவாக எடுத்துக்கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு நல்லது.
சர்க்கரை ஐட்டம்கள் வேண்டாம்
இந்த காலத்தில் சர்க்கரை இல்லாமல் எந்த உணவுப் பொருளும் தயாராவதில்லை. இனிப்புகளில் இதற்கு முன்பு வெல்லம் மற்றும் தேனை பயன்படுத்துவார்கள். இப்போது எல்லாவற்றிலுமே சர்க்கரையை தான் பயன்படுத்துகின்றனர். சர்க்கரையுடன் கூடிய உணவுகளும் உங்களை தூக்க கலக்கத்திற்கு ஆளாக்கும்.
சர்க்கரை உடலுக்கு சக்தியை அளிக்கிறது. ஆனால் அதை அதிகமாக எடுத்துக்கொள்வது உங்களுக்கு நல்லதல்ல. கூடுதலாக இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது உங்களை சோர்வடையச் செய்கிறது.
நல்ல ஆரோக்கியத்திற்கு எல்லாவற்றையும் மிதமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
50 % தள்ளுபடி.. மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் சொல்லப்போகும் ரயில்வே.. என்ன தெரியுமா?