இன்றைய அவசர உலகத்தில் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவர்க்கும் சிறுநீரகக் கல் பிரச்னை இருப்பதை நாம் பார்த்து வருகிறோம்.
இந்த சிறுநீரக கல் பிரச்சனையை சரி செய்ய சிறுபீளை மூலிகையை எப்படி பய்னபடுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
கல்லானது சிறுநீரகத்திலும் இருந்தாலும் சரி, சிறுநீர்க் குழாயில் இருந்தாலும் சரி அதனை லாவகமாக எடுத்து விடும் சக்தி இந்த மூலிகை செடிக்கு உள்ளது.
சிறுபீளை மூலிகைக்கு சிறுகண்பீளை, கண்பீளை, சிறுபீளை, பொங்கல் பூ போன்ற பெயர்களும் உண்டு. இந்த செடியின் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதால் இதனை சிலர் தேங்காய்ப் பூ என்றும் அழைப்பார்கள். இதனை நாம் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் பார்த்து இருப்போம். தவிர தரிசு நிலங்களிலும் வளரும் தன்மை கொண்டது.