வெறும் 30 நாளில் தொப்பை குறையும்!! தினமும் காலை இதை மட்டும் தவறாம குடிங்க!

Published : Jun 20, 2025, 10:19 AM IST

தினமும் காலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களில் ஒன்றை குடித்து வந்தால் ஒரே மாதத்தில் தொங்கும் தொப்பையை சுலபமாக கரைத்துவிடலாம்.

PREV
16
Morning Drink For Reduce Belly Fat

தற்போது நாம் ஒவ்வொருவரும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆனால் மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் உடலில் கொழுப்புகள் ஆங்காங்கே தேங்கி தொப்பையை உண்டாக்குகிறது. 

26
தொப்பையை குறைக்க உதவும் பானங்கள்

இளம் வயதிலேயே தொப்பை வருவது அழகை கெடுப்பது மட்டுமல்லாமல், வயதான தோற்றத்தையும் கொடுக்கும். இதுதவிர, உடலில் பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். ஆகவே தொப்பையை குறைக்க பலர் பலவிதமான முயற்சிகளை செய்கிறார்கள். தொப்பை வந்த பிறகு அதை குறைக்க முயற்சிப்பது போல, அது வராமல் இருக்கக்கவும் முயற்சிப்பது மிகவும் அவசியம். இதற்கு உங்களது அன்றாட வாழ்க்கை முறையில் ஒரு சில பழக்கங்களை தினமும் காலையில் கடைப்பிடித்து வந்தால் உடலில் கொழுப்புகள் தங்குவது தடுக்கப்படும் மற்றும் ஏற்கனவே தேங்கியிருக்கும் விடப்படியான கொழுப்புகளும் சுலபமாக கரைந்து விடும்.

இத்தகைய சூழ்நிலையில், 30 நாட்களுக்குள் கொழுப்புகளை குறைக்கவும் உதவும் ஒரு சில பானங்கள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஒரு மாதத்தில் தொங்கும் தொப்பை மற்றும் எடை குறையும். அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

36
சியா விதை தண்ணீர்:

சியா விதை தண்ணீர் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் ஒரு அற்புதமான பானமாகும். சியா விதைகளில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் அது செரிமானத்தை ஊக்குவித்து, ஊட்டச்சத்துக்களை திறம்பட செயல்பட உதவுகிறது மற்றும் வயிற்று உப்புசத்தையும் தடுக்கும். இதற்கு 1 கிளாஸ் சூடான நீரில் 1 ஸ்பூன் சுய விதைகளை சேர்த்து சிறிது நேரம் அப்படியே ஊற வைத்து, பிறகு அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் மீது இருக்கும் நாட்டம் குறையும். இதனால் எடை சுலபமாக குறைந்து விடும்.

46
இஞ்சி ஜூஸ்:

கொழுப்பை குறைக்கும் சிறந்த மற்றொரு பானம் இஞ்சி ஜூஸ். இஞ்சியில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இந்த ஜூஸை காலையில் குடித்து வந்தால் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிப்பது மட்டுமில்லாமல், திருமணத்தை மேம்படுத்தும் மற்றும் வயிற்று உப்புசத்தை குறைக்கும்.

இஞ்சி ஜூஸ் தயாரிக்க பெரிய இஞ்சி துண்டு ஒன்று, சிறிய மஞ்சள் கிழங்கு ஒன்று இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை வடிகட்டி அதனுடன் 1/2 உன் மிளகுத்தூள், எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து இரவில் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு பிறகு மறுநாள் காலை எழுந்ததும் குடியுங்கள்.

56
கிரீன் டீ மற்றும் எலுமிச்சை பானம்:

இவை இரண்டிலுமே ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. கிரீன் டீயில் இருக்கும் கேட்டசின்கள் உடலில் மெட்டாபாலிசத்தை மேம்படுத்தி, கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. அதுபோல எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் நச்சுக்களை நீக்க உதவுகிறது. எனவே எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கிரீன் டீயில் சிறிதளவு எலும்பிச்சை சாறு கலந்து குடியுங்கள்.

66
லெமன் பெப்பர் டிரிங்க்:

ஒரு கிளாஸ் சூடான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து தினமும் குடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்படும் மற்றும் மெட்டாபாலிசத்தை மேம்படுத்தும். ஏனெனில், இவை இரண்டிலும் இருக்கும் வெப்பத்தன்மை உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும்.

Read more Photos on
click me!

Recommended Stories