உறவில் ஏற்படும் விரிசல்களை எப்படி தடுப்பது? அப்ப இதை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க..

First Published Jan 17, 2024, 7:29 PM IST

உங்கள் துணை உடனான மோதலின் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

திருமண உறவில், மோதல்கள் இயற்கையானது தான். இருப்பினும், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மரியாதை மற்றும் நல்லறிவு வைத்திருப்பது முக்கியம். இது மேலும் பிணைப்பை வலுப்படுத்தவும் ஒன்றாக தீர்வுகளை கண்டறியவும் உதவுகிறது. மோதலின் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்கள் துணையின் கருத்துக்களை ஒப்புக்கொள்வது: மோதலின் மூலம் கூட, உங்கள் துணை ஒரு தனி நபர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், அவர் தனது சொந்த கருத்தை கொண்டிருக்க வேண்டும். 

Latest Videos


உங்கள் துணை உடனான மோதலின் போது, எதிர்வினைகள் அல்லது பதிலுக்கு பதில் பேசுவது மோதலை மோசமாக்கும். எனவே, மோதலின் மூலம் உணர்வுபூர்வமாக கட்டுப்பாடாக இருப்பது மிகவும் முக்கியம். இருவரும் ஒரே நேரத்தில் கோபத்தை காட்டாமல் ஒருவர் பொறுமையாக இருப்பது உங்கள் உறவை மோசமாக்காமல் தடுக்கும்.

உங்கள் துணை உடனான மோதலின் போது, பழி விளையாட்டில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். உங்களால் தான் இப்படி நடந்தது அல்லது நீங்கள் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று நாம் எப்படி உணர்கிறோம் என்பதை விளக்க உங்களை பற்றிய சுய விளக்கத்தை கொடுக்க முயற்சியுங்கள். உங்கள் துணை மீது பழி போடாமல் இருப்பது சண்டையை மேலும் மோசமாக்காமல் தடுக்கும்.

உங்கள் தரப்பு நியாயத்தை நீங்கள் கூறும் போது, அந்த ​உணர்ச்சிகள் மற்றும் நீங்கள் ஏன் அப்படி உணர்கிறீர்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்வது முக்கியது. இதன் மூலம் உங்கள் தரப்பு நியாத்தை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். உங்கள் எதிர்வினைகள், நடத்தை முறைகள் மற்றும் அச்சங்களுக்கு நீங்கள் தான் பொறுப்பு என்பதை உணர்ந்தால் பெரும்பாலான மோதல்களில் கூட உறவை மோசமாக்காமல் தடுக்க முடியும்..

click me!