உடல் வடிவம்:
உங்கள் குழந்தையின் உடலைப் பற்றி ஒருபோதும் எதிர்மறையான வார்த்தைகளைச் சொல்லாதீர்கள். குழந்தையை குண்டு அல்லது ஒல்லி என்ற பொருள் தருமாறு சொல்லி அழைக்க வேண்டாம். இது அவர்களின் உடல் வடிவை அவமானத்திற்குள்ளாக்கும். அவர்களின் தோற்றத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. இது தவிர, குழந்தையின் தோற்றத்தைப் பற்றி எதிர்மறையான விஷயங்களை சொல்லக் கூடாது. கருப்பு, குண்டு, நோஞ்சான் போன்ற எந்த வார்த்தைகளையும் பயன்படுத்த வேண்டாம். அவர்கள் முன் பிறரிடம் அப்படியான வார்த்தைகளை பேசுவதைத் தவிர்க்கவும்.
முட்டாள்:
பெரும்பாலும் பெற்றோர் குழந்தையின் எந்தவொரு செயலின் மீதும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். அதன் காரணமாக அவர்களை முட்டாள் அல்லது மக்கு என்று சொல்கிறார்கள். இது போன்ற வார்த்தைகள் குழந்தைகளின் சுயமரியாதையையும், நம்பிக்கையையும் குறைக்கும். பெற்றோரின் வாயிலிருந்து வரும் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு, குழந்தை தன்னை ஒரு முட்டாளாக நினைக்கத் தொடங்குகிறது. மேலும் புதிய விஷயங்களை முயற்சிக்க பயப்படுகிறது.