அக்கா, தங்கை இருவருக்கும் தாலி கட்டிய இளைஞர்! அதுக்கும் இப்படி ஒரு காரணமா? அடப்பாவி!!

First Published | May 18, 2023, 5:28 PM IST

அக்கா, தங்கை என இரண்டு பேருக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டிய சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. 

ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் உள்ள நிவாய் நகரத்தில் உள்ள கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் நடந்த இந்த திருமண விழாவில் மணமகன் ஒன்றல்ல, இரண்டு மணப்பெண்களை திருமணம் செய்து கொண்டார். அந்த மணமகன் ஹரி ஓம், இவருக்கு வயது 23. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் யுனியாரா நகரம், மோர்ஜாலா-கி-ஜோன்பரியாவைச் சேர்ந்த காந்தா, சுமன் என்ற இருசகோதரிகளை மணந்துள்ளார். 

எந்த தடையும் இல்லாமல் சகல சமயச் சடங்குகளுடன் மண்டபத்தில் இத்திருமணம் நடைபெற்றது. இந்த அரிய திருமணத்தைக் காண நெருங்கிய உறவினர்கள் மட்டுமின்றி, இருதரப்பிலும் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் குவிந்தனர். அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் முழங்க மணமகன், மணப்பெண்கள் இருவருடனும் மணமேடையில் அமர்ந்திருந்தார். இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், இரண்டு பெண்களை திருமணம் செய்ய முன்கூட்டிய திட்டமிடலுடன், திருமண அழைப்பிதழும் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் மணமகன் மற்றும் இரண்டு மணமகள் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. 

Tap to resize

இப்போது இவர்கள் மூவரும் மகிழ்ச்சியாக இருப்பதாக மணமகன் ஹரி ஓமின் மூத்த சகோதரர் ஹரிராம் தெரிவித்துள்ளார். ஆனால் ஹரி ஓம் என்பவர் ஏன் இப்படி இருதார மணம் செய்துகொண்டார் தெரியுமா?

மணமகள்களில் ஒருவரான காந்தாவிடம் தான் ஹரி ஓம் முதலில் மனதை பறிகொடுத்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில், தனது தங்கை சுமனையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று காந்தா நிபந்தனை விதித்துள்ளார்.

ஹரி ஓம், முதலில் அதை கண்டு கொள்ளவில்லை. ஆனால் காந்தா இதை தொடர்ந்து வற்புறுத்தியதால், அவர் இருவரையும் திருமணம் செய்ய முடிவு செய்தார். திருமணத்திற்குப் பிறகு காந்தாவும் சுமனும் தங்கள் கணவனின் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 

Latest Videos

click me!