எந்த ஒரு உறவிலும் ஏமாற்றப்படுவது என்பது வலிமிகுந்த நினைவுகளை கொடுக்கும். அது காதலாக இருந்தாலும் சரி அல்லது திருமணமாக இருந்தாலும் சரி... தனிப்ப்பட்ட அல்லது தொழில்முறை உறவில் யாராவது உங்களை ஏமாற்றுகிறார்களா என்பதைக் கண்டறிவது ஒரு சிக்கலான பணியாகும், ஏனெனில் ஏமாற்றுபவர்கள் தங்கள் செயல்களை மறைப்பதில் மிகவும் திறமையானவர்கள். இருப்பினும், நேர்மையற்ற தன்மையைக் குறிக்கும் சில பொதுவான அறிகுறிகள் உள்ளன. யாராவது ஏமாற்றினால், அவர்கள் குறிப்பிடத்தக்க நடத்தை மாற்றங்களை வெளிப்படுத்தலாம். இதில் இரகசியம் காப்பது, திடீர் தற்காப்பு அல்லது அவர்களின் அணுகுமுறை மற்றும் செயல்களில் ஒட்டுமொத்த மாற்றம் ஆகியவை அடங்கும்.