கள்ள உறவில் இருக்கும் துணையை ஒப்புக்கொள்ள வைப்பது எப்படி? இதோ வழிமுறைகள்..!!

First Published | Sep 5, 2022, 11:19 PM IST

இன்றைய நவீன உலகில் பலரும் குடும்பத்தினரை விட வெளிமனிதர்களுடன் தான் அதிகளவில் தொடர்பில் உள்ளனர். நட்பு வட்டம், அலுவலக வட்டம், தெரிந்தும் தெரியாதோரின் வட்டம் என ஒவ்வொருவருடைய பழக்கவழக்கமும் வீட்டை கடந்து செல்கிறது. இது திருமணமான தம்பதிகளுக்கும் பொருந்தும். துணையுடன் இருப்பதை விடவும், தம்பதிகள் பலர் வெளியுலகத்துடன் தான் அதிகம் தொடர்பில் இருக்க நேரிடுகிறது. இதனால் திருமணத்தை மீறிய உறவு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. எதார்த்ததை புரிந்துகொள்ளும் சிலர், எந்த சிக்கலிலும் சிக்காமல் தப்பிவிடுகின்றனர். ஆனால் பலருக்கு அது பெரும் சவாலாக அமைந்துவிடுகிறது. கள்ள உறவு திருமணத்தை சீர்குலைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதற்காக சகித்துக் கொண்டும் இருக்க முடியாது. உங்களுடைய துணை திருமணத்தை மீறிய உறவில் இருப்பதை, அவருக்கே தெரியாமல் நீங்கள் கண்டறிய சில வழிமுறைகள் உள்ளன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
 

நேருக்கு நேர்

உங்களது துணை, தங்களை ஏமாற்றுவதாக தெரிந்தால் நிச்சயமாக தாங்கிக் கொள்ள முடியாது தான். அவரிடம் ”நேரடியாக கேட்டுவிட வேண்டும்” என்று பலருக்கும் தோன்றும். மனத்திற்குள் வைத்திருக்க முடியவில்லை, இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று எண்ணுவோர் உடனடியாக கேட்டுவிடுவது நல்லது. ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டு கேட்பது உசிதமாக இருக்கும். உண்மைக்கு நெருக்கமான ஒரு வழியை உருவாக்கி கேள்வி கேட்பது பொருத்தமாக அமையும். அப்படி நீங்கள் கிடுக்குப்பிடி போடும் போது, உண்மை என்ன என்பதை உங்களுடைய துணைவர் / அல்லது துணைவி ஒப்புக்கொள்வார்.
 

அக்கறை

நீங்கள் கிடுக்குப்பிடி போட்டு கேள்விக் கேட்கும் போது, உங்கள் துணையை ஊக்குவிக்கும் வகையில் நீங்கள் ஏதேனும் சொல்ல வேண்டும். இதுவரையிலான வாழ்க்கையில் நீங்கள் செய்யக்கூடிய ஏதாவது ஒரு செய்கை உங்கள் துணைக்கு நம்பிக்கையை அளிக்கும். அதை தெரிந்துகொண்டு, உங்கள் உடல்மொழியில் அதை வெளிப்படுத்தலாம். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஆய்வுகளில் துணை பேசப் பேச எதிரில் இருப்பவர் தலையை அசைப்பது சிறந்த ஊக்குவிக்குமாக இருக்கும் என்று தெரிய வருகிறது. உங்களுடைய துணையிடம் விசாரிக்கும் தொனியில் பேசாமல், அக்கறைக் காட்டுங்கள். அவர் பேசப்பேச தலையை அசையுங்கள். இதனால் ஊக்குவிக்கப்படும் உங்களுடைய துணை மேலும் உண்மையை சொல்ல நேரிடும். இதன்மூலம் பிரச்னையை புரிந்துகொண்டு தீர்வை நோக்கி நீங்கள் நகரலாம்.
 


அடக்கம்

உங்கள் துணையின் நேர்மையை நீங்கள் சுட்டிக்காட்டி, சுருக்கமாக கேள்விகளை எழுப்புங்கள். இது தவறு செய்தவர்களுக்கு குற்ற உணர்வை தூண்டும். அதன்காரணமாகவும் திருமணத்தை மீறிய உறவை அவர் ஒப்புக்கொள்வார். “பொய் வேண்டாம், நான் உங்களிடம் பொய் சொன்னதே இல்லை” என்கிற உங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி, அதுசார்ந்த பதிலை வாங்கப் பாருங்கள். ஏதோ குற்றம் செய்தவர் போன்று துணை உணரச்செய்வதில் எந்த பயனும் இல்லை. இதை நீங்கள் துரோகமாக கருதும்பட்சத்தில், குற்றத்தை மெதுவாகத்தால் வெளியில் கொண்டுவர முடியும். மேலும் நீங்கள் அளந்து “ஊசி” போல பேசினால் தான், துணையின் பதில் விரிவாக வரும்.
 

திடம்

நீங்கள் கேள்விகளை கட்டுப்பாடுடன் கேட்க, கேட்க உங்கள் துணை தங்களை சமாதானம் செய்யப் பார்ப்பார் அல்லது கோபம் கொண்டு பேசுவார். சில நேரங்களில் கோபம் சீற்றமாகக் கூட உருவெடுக்கும். அதை முன்னமே ஆலோசித்து, நீங்கள் அமைதியுடன் இருப்பது நல்லது. உங்கள் கேள்வியில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அதாவது உங்களுடைய தவறு என்னவாக இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டு, அதை கேள்வியுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக “நான் வேலையில் பிஸியாக இருக்கிறேன் (அல்லது) குழந்தையை கவனிப்பதில் என் நேரம் போய்விடுகிறது என்று எனக்கு தெரியும். ஆனால் அந்த சமயத்தில் நீங்கள் வேறு யாரையாவது பார்க்கிறீர்களா? என்பது போல கேள்விகளை தொகுத்து கேட்கவேண்டும். இதன்மூலம் உங்கள் துணை அளிக்கும் பதிலை வைத்து, அதிலுள்ள உண்மைகளை நீங்கள் பிரித்தெடுக்க முடியும்.

பெண்கள் குறித்து ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 8 விஷயங்கள்..!!
 

மன்னிப்பு

உங்களுடைய துணை தங்களை ஏமாற்றுவதாக தோன்றினால், மிகவும் ஏதேச்சையான நேரத்தில் எதிர்பாராத தருணத்தில் கேள்விகளை எழுப்புங்கள். மிகவும் அமைதியாகவும் பேச்சுவார்த்தை நடந்த தயாராக இருக்கிறேன் என்கிற பாணியில் உங்களை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள். அனுதாபம் இருந்தாலும், அதை வெளிப்படுத்துவது உங்கள் முடிவு. கூடமான வரை குற்றஞ்சாட்டுவதற்கு ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், அதை கையில் வைத்துக்கொள்ளுங்கள். கேட்க வேண்டும் என்று எண்ணுகிற கேள்விகளை கேட்டுவிட்டு, மன்னிக்க தயாராக இருப்பதாக கூறுங்கள். அதற்கு ஒப்புக்கொள்ளும் நோக்கில் உங்கள் துணை ஏதாவது பேசினாலோ அல்லது உடல்மொழியை வெளிப்படுத்தினாலோ, அவரது கள்ள உறவு வெளிப்பட்டுவிடும். அதை தொடர்ந்து உங்களுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கையை நீங்கள் மேற்கொள்ளலாம். 

திருமணத்துக்கு பிறகு கணவனிடம் எல்லாமே சொல்ல வேண்டுமா என்ன? பெண்களே உஷார்..!!
 

Latest Videos

click me!