ஆர்தர் ஓ'உர்சோவின் உணவு பழக்கம்!!
ஆர்தர் தனது உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனித்துக்கொள்கிறார். தனது மாடலிங் தொழிலில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, கடுமையான உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை பின்பற்றுகிறார். மிதமான கார்போஹைட்ரேட்டுகளுடன் அதிக நார்ச்சத்து, அதிக புரதச்சத்துள்ள உணவை எடுத்துக்கொள்கிறார். தினமும் புரத உட்கொள்ளலுக்காக முட்டையின் வெள்ளைக்கருவை உண்கிறார். கொழுப்பு நிறைந்த மீன், சிவப்பு நிற இறைச்சி, சீஸ் ஆகியவற்றையும் உண்கிறார். நார்ச்சத்து கிடைக்க கீரை, பச்சை காய்கறிகள், பல்வேறு வகையான பழங்களை சாப்பிடுகிறாராம்.