Chicken Cultivating:அமெரிக்காவின் 'அப்சைடு ஃபுட்ஸ்' நிறுவனம், ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட கோழி இறைச்சியை வணிக ரீதியாகச் சந்தையில் அறிமுகப்படுத்தி உணவுத் துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
கோழிகளை வளர்த்து வெட்டுவதற்குப் பதிலாக, கோழியின் உயிரணுக்களை ஆய்வகத்தில் வளர்த்து இந்த இறைச்சி தயாரிக்கப்படுகிறது. இதனுடன் சோயா புரதம், பட்டாணி நார்ச்சத்து மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற தாவரவியல் பொருட்கள் சேர்க்கப்பட்டு உண்மையான இறைச்சியின் சுவை மற்றும் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
25
அரசு அங்கீகாரம் மற்றும் விற்பனை விரிவாக்கம்
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மற்றும் வேளாண் துறை (USDA) ஆகியவற்றின் இரண்டாவது கட்ட அனுமதியைப் பெற்று, இரண்டு வகையான ஆய்வக இறைச்சிகளுக்கு அங்கீகாரம் பெற்ற உலகின் முதல் நிறுவனமாக இது திகழ்கிறது.
35
பிரம்மாண்ட உற்பத்தித் திறன்
அரை ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பில், 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட தொட்டிகள் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் பவுண்டுகளுக்கும் அதிகமான இறைச்சியை உற்பத்தி செய்யும் திறனை இந்நிறுவனம் எட்டியுள்ளது. இதனால் இறைச்சியின் விலை குறையவும், உணவகங்களுக்கு எளிதில் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல உணவகங்கள் மற்றும் சமையல் கலைஞர்களின் வரவேற்பு
முதற்கட்டமாக கலிபோர்னியாவின் முக்கிய உணவகங்கள் மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக உணவகங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தாமஸ் கெல்லர் மற்றும் நான்சி சில்வர்டன் போன்ற உலகப் புகழ்பெற்ற சமையல் கலைஞர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த மாற்றத்தை வரவேற்றுத் தங்கள் சமையலறைகளில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
55
உலகின் முதல் ஹலால் சான்றிதழ்
'சர்க்கிள் எச்' அமைப்பின் ஓராண்டு ஆய்வுக்குப் பிறகு, ஹலால் சான்றிதழ் பெற்ற உலகின் முதல் ஆய்வக இறைச்சி நிறுவனமாக அப்சைடு ஃபுட்ஸ் மாறியுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களும் இதனைத் தயக்கமின்றி உண்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.