முட்டை: ஒரு குழந்தைக்கு தினமும் முட்டை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டை புரதத்தின் சிறந்த மூலமாகும் மற்றும் குழந்தைகளுக்கு ஆற்றல் நிறைந்த உணவாகும். முட்டையின் மஞ்சள் கருவில் கோலின் நிறைந்துள்ளது. இது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது மட்டுமின்றி, முட்டையில் வைட்டமின்கள் ஏ, பி2, பி5, பி6, பி12, டி, ஈ மற்றும் கே மற்றும் ஃபோலேட், பாஸ்பரஸ், கால்சியம், ஜிங்க் மற்றும் செலினியம் ஆகியவை நிறைந்துள்ளன. இவை அனைத்தும் நினைவாற்றல் மற்றும் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.