Kids favourite red banana: நன்கு பழுத்த செவ்வாழை பழங்களை வைத்து குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ஒரு டேஸ்டியான தோசை ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம். இதை ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கூட சாப்பிடலாம்.
தினமும் ஒரே மாதிரியான தோசை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு, சத்தான மற்றும் சுவையான மாற்று உணவுதான் இந்த செவ்வாழை இனிப்பு தோசை. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையில் இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.
26
தேவையான பொருட்கள்
செவ்வாழைப்பழம்
ரவை அல்லது அரிசி மாவு
சிவப்பு அவல்
தயிர்
நாட்டுச் சர்க்கரை
ஏலக்காய்த்தூள்
மஞ்சள் தூள்
ஆப்ப சோடா
நெய்
தண்ணீர்
36
படி 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தோல் உரித்த இரண்டு செவ்வாழைப்பழங்கள், முக்கால் கப் ரவை அல்லது அரிசி மாவு, முக்கால் கப் சிவப்பு அவல் மற்றும் முக்கால் கப் தயிர் ஆகியவற்றைச் சேர்க்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் கால் கப் நாட்டுச் சர்க்கரை, சிறிதளவு ஏலக்காய்த்தூள் மற்றும் தேவைக்கேற்பத் தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு நைஸாக அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றவும். இந்த மாவுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிட்டிகை ஆப்ப சோடா சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலந்து கொள்ளவும்.
56
படி 3
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். கல்லில் ஒரு குழிக்கரண்டி மாவை ஊற்றி, அதிகம் தேய்க்காமல் இலேசாக மட்டும் பரப்பி விடவும். தோசையைச் சுற்றி ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி, ஒரு மூடி போட்டு அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து ஒரு நிமிடம் வேக விடவும். ஒரு நிமிடம் கழித்து மூடியைத் திறந்து தோசையைத் திருப்பிப் போட்டு, மறுபக்கமும் பொன்னிறமாகி, லேசாக மொறுமொறுப்பாக சற்றுக் கருகிய நிறம் வரும் வரை வேக வைத்து எடுத்தால், சுவையான செவ்வாழை இனிப்பு தோசை தயார்.
66
ஆரோக்கியமான தோசை
பொதுவாக வீட்டில் வாழைப்பழம் அதிகமாகப் பழுத்து, தோல் சற்றுக் கறுத்துப் போனால் அதை யாரும் சாப்பிட விரும்ப மாட்டார்கள். அப்படிப் பழுத்த பழங்களைத் தூக்கி எறியாமல், அவற்றை வைத்து மிகச் சுவையான இனிப்பு தோசை அல்லது குழிப்பணியாரம் கூடச் செய்யலாம். சாதாரண பழங்களுக்குப் பதிலாகச் செவ்வாழை அல்லது நேந்திரம் பழத்தைப் பயன்படுத்தும்போது, இந்த தோசையின் சத்தும் சுவையும் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். மாலை நேரச் சிற்றுண்டியாகவோ அல்லது காலை உணவாகவோ குழந்தைகளுக்குச் செய்து கொடுக்க இது ஒரு சிறந்த ஆரோக்கியமான தேர்வாகும்.