Bachelor special recipe: பேச்சுலர்ஸ் சமைக்க நேரம் இல்லாதபோது சட்டுன்னு வெறும் 10 நிமிடத்தில் சமைக்க கூடிய இந்த சோயா சுக்வானி ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க, அந்த சுவை உங்க நாக்கு விட்டு போகாது.
வேலைப்பளு காரணமாக சமைக்கவே மனமில்லாத நாட்களிலோ அல்லது பேச்சுலர்ஸ் அறையில் குறைந்த நேரத்தில் சுவையான உணவு சமைக்க நினைக்கும் போதோ, வெறும் 10 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு அருமையான ரெசிபிதான் இந்த நேபாளி ஸ்பெஷல் சோயா சுகாவ்னி. புரதச்சத்து நிறைந்த சோயா சங்க்ஸ் மற்றும் தயிர் கலவையில் உருவாகும் இந்த உணவு, அதிக மசாலா அரைக்கும் வேலை இல்லாமல் மிக எளிமையாகத் தயாரிக்கக்கூடியது. சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும், சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளவும் இதன் சுவை வேற லெவலில் இருக்கும்.
26
தேவையான பொருட்கள்
வேகவைத்துப் பிழிந்த சோயா சங்க்ஸ்
எண்ணெய்
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள்
மல்லித்தூள்
உப்பு
பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்
கொத்தமல்லி இலைகள்
கெட்டித் தயிர்
கசூரி மேத்தி
36
படி 1
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அடுப்பைச் சிறிய தீயில் வைத்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மசாலா கருகும் முன்பே, ஏற்கனவே சுடுநீரில் வேகவைத்துத் தண்ணீரை நன்கு பிழிந்து எடுத்து வைத்துள்ள சோயா சங்க்ஸை இதில் சேர்க்கவும். மசாலா சோயாவில் நன்கு ஒட்டும் வரை 2 முதல் 3 நிமிடங்கள் நன்கு வறுத்து தனியே ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.
வறுத்த சூடான சோயாவுடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்கு குலுக்கி கலந்து வைக்கவும். மற்றொரு கிண்ணத்தில் எடுத்து வைத்துள்ள தயிரைச் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நல்ல கிரீமியான பதம் வரும் வரை விஸ்க் அல்லது கரண்டியால் நன்கு அடித்துக்கொள்ளவும்.
56
படி 3
ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் சிறிதளவு கசூரி மேத்தி சேர்த்து லேசாக வறுக்கவும். இந்தச் சூடான தாளிப்பை அடித்து வைத்துள்ள தயிரில் ஊற்றி நன்கு கலக்கவும்.
66
படி 4
இப்போது மசாலா கலந்த தயிரை, ஏற்கனவே தயாராக வைத்துள்ள சோயா - வெங்காயக் கலவையில் ஊற்றவும். இதனுடன் சுவைக்கு ஏற்ப தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறினால், சுவையான மற்றும் கிரீமியான நேபாளி சோயா சுகாவ்னி தயார். இதனைச் சூடான சாதத்துடன் பரிமாறி ருசிக்கலாம்.