Iron rich Sweet Dates Chutney: இந்த சட்னி சாப்பிட்டா இரும்புச் சத்து அதிகரிக்கும்... இனிப்பு சுவை நிறந்த பேரீச்சம்பழம் சட்னி!

Published : Nov 26, 2026, 12:52 PM IST

Iron rich Sweet Dates Chutney: நாம் அன்றாடம் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகளுக்குத் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அல்லது புதினா சட்னி என ஒரே சட்னி செய்வோம். அதற்கு பதிலாக சுவையான ரெசிபிதான் இந்த பேரீச்சம்பழம் சட்னி.

PREV
15
இரும்புச்சத்து சட்னி

இனிப்பு, புளிப்பு மற்றும் காரம் என அறுசுவைகளும் சமநிலையில் கலந்த ஒரு அற்புதமான சைட் டிஷ் இந்த பேரீச்சம்பழம் சட்னி. இந்த ரெசிபியை, வீட்டிலேயே மிக எளிமையாக இரண்டே நிமிடங்களில் தயார் செய்து விடலாம். இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சம்பழத்தைக் கொண்டு செய்யப்படுவதால், இது உடலுக்கு ஆரோக்கியத்தையும் உடனடி ஆற்றலையும் தருகிறது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் இனிப்பு, புளிப்பு மற்றும் காரம் கலந்த உணவு ஆசைகளைப் பூர்த்தி செய்ய இது ஒரு சிறந்த தேர்வாகும்.

25
தேவையான பொருட்கள்

பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – அரை கப்

காஷ்மீரி மிளகாய்த்தூள்

எலுமிச்சை சாறு

உப்பு

தண்ணீர்

35
படி 1

முதலில் ½ கப் பேரீச்சம்பழத்தை எடுத்து, அவற்றின் உள்ளே இருக்கும் கொட்டைகளை முழுமையாக நீக்கிவிடவும். மென்மையான பேரீச்சம்பழங்களைப் பயன்படுத்துவது அரைப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கும். கொட்டை நீக்கிய பேரீச்சம்பழங்களை ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் மாற்றிக்கொள்ளவும்.

45
படி 2

அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் சட்னிக்குத் தேவையான அளவு கல் உப்பைச் சேர்க்கவும். காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்ப்பதால் சட்னிக்கு நல்ல அடர் சிவப்பு நிறம் கிடைப்பதோடு, காரமும் அதிகமாக இல்லாமல் இருக்கும். அடுத்ததாக, 2 டேபிள் ஸ்பூன் அளவிற்குப் புதிதாகப் பிழிந்த எலுமிச்சை சாற்றை அதில் ஊற்றவும். இது பேரீச்சம்பழத்தின் அதிகப்படியான இனிப்பைச் சமன் செய்து, ஒரு அருமையான புளிப்புச் சுவையைத் தரும்.

55
படி 3

தண்ணீர் எதுவும் சேர்க்காமல், மிக்ஸியில் நன்கு மையாக, பேஸ்ட் பதத்திற்கு அரைத்தெடுக்கவும். அவ்வளவுதான், நாவூறும் சுவையில், ஆரோக்கியம் நிறைந்த பேரீச்சம்பழம் சட்னி வெறும் இரண்டு நிமிடங்களில் தயாராகிவிட்டது. இதைச் சூடான ஆப்பம், இட்லி, தோசை, சப்பாத்தி அல்லது பிரெட் டோஸ்ட் ஆகியவற்றுடன் வைத்துப் பரிமாறினால் சுவை அபாரமாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர்/ உடல்நலப் பயிற்சியாளரை அணுகவும்.

Read more Photos on
click me!

Recommended Stories