Green Gram Beetroot Adai: ஹெல்த்தியான பச்சை பயறு பீட்ரூட் அடை.. இப்படி செஞ்சு பாருங்க, மொறுமொறுனு சூப்பரா இருக்கும்!

Published : Oct 12, 2026, 03:42 PM IST

Green Gram Beetroot Adai : முளைகட்டிய பச்சை பயறு, பீட்ரூட், வெங்காயம், பச்சை மிளகாய், மசாலா மற்றும் கடலை மாவு சேர்த்து சுவையான பச்சை பயறு பீட்ரூட் அடை செய்வது எப்படி? புரதச்சத்து நிறைந்த இந்த வித்தியாசமான அடையை வீட்டிலேயே எளிதாகச் செய்து சுவைக்கலாம்.

PREV
16
பச்சை பயறு பீட்ரூட் அடை

ஹெல்த்தியாக சாப்பிட வேண்டும், அதேசமயம் தினமும் சாப்பிடும் உணவிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால், இந்த பச்சை பயறு பீட்ரூட் அடையை ஒருமுறை ட்ரை பண்ணிப் பாருங்க.

புரதச்சத்து நிறைந்த பச்சை பயறு, நிறத்தையும் சுவையையும் சேர்க்கும் பீட்ரூட், காரத்திற்குப் பச்சை மிளகாய், மணத்திற்கு மசாலா என எளிமையான பொருட்களை வைத்தே இந்த அடையைச் செய்யலாம். மேலே தூவும் வெள்ளை எள்ளு இதற்கு கூடுதல் சுவையைத் தரும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வித்தியாசமான சிற்றுண்டியாகவோ, காலை அல்லது மாலை உணவாகவோ இதைச் செய்து கொடுக்கலாம். எண்ணெயைக் குறைவாகப் பயன்படுத்தி, மொறுமொறுப்பாகச் செய்யக்கூடிய இந்த ரெசிபியை நீங்களும் வீட்டிலேயே முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:

முளைகட்டிய பச்சை பயறு - 1 கப்

பீட்ரூட் - 1 சிறியது

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 2 முதல் 3 பல்

கடலை மாவு - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1\4 டீஸ்பூன்

சீரகம் - 1\2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வெள்ளை எள்ளு - 1 முதல் 2 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

26
பச்சை பயறு பீட்ரூட் அடை செய்வது எப்படி? படி- 1

பச்சை பயறை முளைகட்டவும்

பச்சை பயறை நன்றாகக் கழுவி, 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை வடிகட்டி, ஈரமான சுத்தமான துணியில் கட்டி 12 - 24 மணி நேரம் அல்லது முளைகள் வரும் வரை வைக்கவும்.

36
படி- 2

பொருட்களை அரைக்கவும்

முளைகட்டிய பச்சை பயறை மிக்சி ஜாரில் போடவும். அதோடு கழுவி தோல் சீவி நறுக்கிய பீட்ரூட், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து, குறைந்த அளவு தண்ணீர் பயன்படுத்திக் கெட்டியான கலவையாக அரைக்கவும்.

46
படி- 3

மசாலா மற்றும் கடலை மாவு சேர்க்கவும்

அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றவும். அதில் மஞ்சள் தூள், சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் கடலை மாவைச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும். மாவு மிகவும் தளர்வாக இல்லாமல், அடையாகத் தட்டும் பதத்தில் இருக்க வேண்டும்.

56
படி- 4

அடையாகத் தட்டவும்

தோசைக்கல்லை மிதமான சூட்டில் வைத்து சிறிதளவு எண்ணெய் தடவவும். மாவை ஒரு கரண்டி அளவு எடுத்து சிறிய வட்டமாகத் தட்டவும். அடையின் மேல் வெள்ளை எள்ளைத் தூவவும்.

66
படி- 5

இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்

அடையின் ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விடவும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கத்தையும் நன்றாக வேகவைக்கவும். வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உள்ளே முழுமையாக வெந்தும் வந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

சுவையாக வர சில டிப்ஸ்

  • மாவு தண்ணீராகிவிட்டால் சிறிதளவு கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
  • மொறுமொறுப்பாக வேண்டுமெனில் அடையை மிகவும் தடிமனாகத் தட்ட வேண்டாம்.
  • எண்ணெயைக் குறைவாகப் பயன்படுத்தி மிதமான தீயில் வேகவைக்கவும்.
  • தேங்காய் சட்னி, புதினா சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறலாம்.
  • முளைகட்டிய பயறைச் சமைக்காமல் சாப்பிடுவதற்குப் பதிலாக, அடையாக முழுமையாக வேகவைத்துச் சாப்பிடுவது சிறந்தது.
Read more Photos on
click me!

Recommended Stories