Avarakkai Egg Rice : 10 நிமிடத்தில் சத்தான அவரைக்காய் முட்டை சாதம்.. குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸுக்கு சூப்பர் ரெசிபி!

Published : Nov 11, 2026, 11:06 AM IST

Avarakkai Egg Rice : தினமும் ஒரே மாதிரியான லஞ்ச் பாக்ஸ் உணவுகளா? அவரைக்காய், முட்டை, சாதம் வைத்து வெறும் 10 முதல் 15 நிமிடங்களில் சுவையான அவரைக்காய் முட்டை சாதம் செய்யலாம். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் இந்த ஈஸி ரெசிபியை முயற்சி செய்யுங்கள்.

PREV
112
அவரைக்காய் முட்டை சாதம்

தினமும் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் என்ன கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வழக்கமாக லெமன் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் என்று கொடுத்தே சலித்துவிட்டீர்களா? அப்படியானால் இந்த முறை சத்தும் சுவையும் நிறைந்த அவரைக்காய் முட்டை சாதத்தை செய்து கொடுத்துப் பாருங்கள்.

அவரைக்காயின் சத்துக்கள், முட்டையின் புரதம், சாதத்தின் நிறைவு என அனைத்தும் ஒரே உணவில் கிடைத்துவிடும். குறிப்பாக காலையில் அவசரமாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு வெறும் 10 முதல் 15 நிமிடங்களில் இந்த சாதத்தைத் தயார் செய்துவிடலாம்.

அவரைக்காயை விரும்பிச் சாப்பிடாத குழந்தைகள்கூட முட்டையுடன் சேர்த்து இப்படி செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். வாருங்கள், இந்த எளிய லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

212
அவரைக்காய் முட்டை சாதம் செய்ய தேவையான பொருட்கள்
  • வடித்த சாதம் - 2 கப்
  • அவரைக்காய் - 1 கப்
  • முட்டை - 2
  • பெரிய வெங்காயம் - 1
  • கடுகு - 1\2 டீஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு - 1\2 டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு - 1\2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 1
  • மஞ்சள்தூள் - 1\4 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் - 1\2 டீஸ்பூன்
  • கருவேப்பிலை - சிறிதளவு
  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
312
அவரைக்காய் முட்டை சாதம் செய்முறை - படி 1

அவரைக்காய் நறுக்குதல்

முதலில் அவரைக்காயின் இருபுறமும் உள்ள நார்களை நீக்கிவிட்டு, தண்ணீரில் நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும். பின்னர் அவரைக்காயை நீளவாக்கில் பொடிப்பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

412
படி 2

தாளிக்கவும்

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்துப் பொரிய விடவும். பின்னர் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் கருவேப்பிலை சேர்க்கவும்.

512
படி 3

வெங்காயம் வதக்கவும்

இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கினால் சுவையாக இருக்கும்.

612
படி 4

அவரைக்காயை வேகவைக்கவும்

வதங்கிய வெங்காயத்துடன் மஞ்சள்தூள் சேர்க்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய அவரைக்காயைச் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாகக் கிளறவும். அவரைக்காய் வேகுவதற்காக சிறிதளவு தண்ணீர் தெளித்து கடாயை மூடி வைக்கவும்.

712
படி 5

முட்டை சேர்க்கவும்

அவரைக்காய் நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும், இரண்டு முட்டைகளை உடைத்து அதில் ஊற்றவும். முட்டையுடன் அவரைக்காயை நன்றாகக் கிளறவும். முட்டை நன்கு வெந்து உதிரியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

812
படி 6

மசாலா சேர்க்கவும்

இப்போது காரத்திற்கு ஏற்ப மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். குழந்தைகளுக்குக் கொடுப்பதாக இருந்தால் மிளகுத்தூளின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.

912
படி 7

சாதம் சேர்க்கவும்

இறுதியாக வடித்து ஆறவைத்த சாதத்தைச் சேர்த்து, அவரைக்காய் மற்றும் முட்டை மசாலாவுடன் மெதுவாகக் கிளறவும். சாதம் முழுவதும் மசாலா கலக்கும் வரை கிளறினால் போதும். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

1012
படி 8

அவ்வளவுதான் சுவையான, சத்தான அவரைக்காய் முட்டை சாதம் தயார். இதனை சூடாகவோ அல்லது லஞ்ச் பாக்ஸிலோ வைத்துக் குழநதைகளுக்குக் கொடுக்கலாம்.

1112
அவரைக்காய் முட்டை சாதத்தின் சிறப்புகள் என்ன?

அவரைக்காயின் சத்துக்கள்: அவரைக்காயில் நார்ச்சத்து, தாவரப் புரதம் மற்றும் பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. இது சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக அமையும்.

முட்டையின் புரதச்சத்து: முட்டையில் உயர்தர புரதம் உள்ளது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் தசைகளின் பராமரிப்புக்கும் புரதம் அவசியம்.

எளிதான மதிய உணவு: சாதம், காய்கறி, முட்டை என மூன்றையும் ஒரே உணவில் சேர்த்துக் கொடுக்க முடியும்.

குறைந்த நேரத்தில் தயாரிக்கலாம்: ஏற்கெனவே வடித்து வைத்த சாதத்தைப் பயன்படுத்தினால் சுமார் 10 முதல் 15 நிமிடங்களில் இந்த உணவைத் தயார் செய்யலாம்.

1212
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை
  • அவரைக்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கிச் சேர்க்கவும். அப்போதுதான் குழந்தைகள் எளிதாகச் சாப்பிடுவார்கள்.
  • காரம் அதிகம் சேர்க்காமல் மிளகுத்தூளைக் குறைவாகப் பயன்படுத்தவும்.
  • முட்டை முழுமையாக வேகியிருப்பதை உறுதி செய்யவும்.
  • சாதம் குழையாமல் உதிரியாக இருந்தால் சுவையாக இருக்கும்.
  • லஞ்ச் பாக்ஸில் வைப்பதற்கு முன்பு சாதத்தை ஆறவிட்டு, சுத்தமான உணவுப் பெட்டியில் வைக்கவும். நீண்ட நேரம் அறை வெப்பநிலையில் வைக்காமல், பாதுகாப்பான வெப்பநிலையில் பராமரிக்கவும்.
Read more Photos on
click me!

Recommended Stories