பழங்கள்:
பொதுவாக பழங்கள் நம் இதயத்திற்கு மிகவும் நல்லது. அதனால்தான் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக் பெர்ரிகளை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் அவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இவற்றில் அந்தோசயனின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும், வீக்கத்தையும் குறைக்க உதவுகின்றன.