பொதுவாகவே பெண்கள் தங்களது சரும பராமரிப்புக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் அவர்களை அறியாமலேயே சரும பராமரிப்பில் செய்யும் சில தவறுகள் அவர்களது சருமத்தை மோசமாக பாதிக்கும் தெரியுமா? இதன் விளைவாக முதிர் வயதிற்கு பிறகு வரக்கூடிய சரும பிரச்சனைகள் இளம் வயதிலேயே வந்துவிடும். 40 வயதிற்கு பிறகு ஒவ்வொரு பெண்களும் தங்களது சருமப் பராமரிப்பில் சில விஷயங்களை செய்யக்கூடாது. அது என்ன என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
26
வேகமாக எடையை குறைத்தல்
பொதுவாக மெனோபாஸ் சமயத்தில் பெண்களின் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளன. இதனால் பலர் எடையை வேகமாக குறைக்க முயற்சிப்பார்கள். ஆனால் அப்படி செய்வது தவறு. ஏனெனில் வேகமான எடை இழப்பின் போது முகத்தில் இருக்கும் தசைகள் தளர்ந்து, விரைவிலே வயதான தோற்றத்தை ஏற்படுத்தி விடும். அதற்கு பதிலாக ஆரோக்கியமான முறையில் எடையை இழக்கலாம்.
36
புரத உணவுகளை தவிர்த்தல்
புரத உணவுகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. ஆனால் எடை இழப்பின் போது புரத உணவுகளை பலர் தவிர்த்து விடுவார்கள். ஆனால் புரத உணவுகளை ஒருபோதும் தவிர்க்கவே கூடாது. முக்கியமாக நீங்கள் உடற்பயிற்சி தினமும் செய்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக நம் எல்லோருடைய முகத்திலும் தேவையற்ற முடி இருக்கும். இந்த முடியானது வயது கூட கூட அடர்த்தியாக பருமனாக மாறிவிடும். எனவே இந்த வயதிலேயே லேசர் சிகிச்சை மூலம் அதை எடுத்து விடுங்கள். அதுதான் நல்லது. இல்லையெனில் 50 வயதிற்கு பிறகு அது உங்களது முகத்தின் தோற்றத்தையே மாற்றிவிடும். மேலும் அந்த வயதில் லேசர் சிகிச்சை உதவவே உதவாது.
56
தோல் பராமரிப்பு
நீங்கள் இதுவரை எந்த தோல் பராமரிப்பும் செய்யவில்லை என்றால், 40 வயதில் செய்ய விரும்பினால் எல்லாவிதமான சருமப் பொருட்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது உங்களது சருமத்தை சேதப்படுத்தும். எனவே உங்களது சருமத்திற்கு ஏற்ப ஸ்கின் மருத்துவரிடம் கேட்டு செய்யுங்கள். இல்லையெனில் உங்களது சருமம் சீக்கிரமே வறண்டு போய்விடும். மேலும் சருமத்தில் எரிச்சலையும் ஏற்படுத்தும்.
66
முக்கிய குறிப்பு
- தோல் பராமரிப்பிற்காக நீங்கள் ஜிங்க, மெக்னீசியம், வைட்டமின் டி சப்ளிமென்ட்களை மருத்துவரிடம் ஆலோசனை கேட்காமல் சுயமாக ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
- உங்கள் தூக்கம் முறை சரியாக இருக்க வேண்டும். தினமும் 8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும்.
மேலே சொன்ன விஷயங்களை கடைப்பிடித்தால் நிச்சயமாக உங்களது சருமம் ஆரோக்கியத்துடன் இருக்கும்.