மெல்லிய, வறண்ட கூந்தல் மீண்டும் உயிர்ப்பிக்க இந்த முட்டை ஹேர் பேக் ட்ரை பண்ணுங்க!

First Published Oct 28, 2023, 3:25 PM IST

முட்டையில் பயோட்டின் மற்றும் ஃபோலேட் போன்ற புரதங்கள் உள்ளன. அவை முடியை சரிசெய்து வளர்க்கின்றன. இது கூந்தலைத் துள்ளும் தன்மையுடையதாக்குவதுடன், முடியின் ஆழமான சீரமைப்பையும் வழங்குகிறது.

பெண்கள் தங்கள் தலைமுடியின் அழகையும் பளபளப்பையும் பராமரிக்க பலவிதமான வழிகளை கையாளுகின்றனர். முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் இருக்க, அதை கவனித்துக்கொள்வது மற்றும் அதை வளர்ப்பது மிகவும் முக்கியம். முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் முட்டை மிகவும் உதவியாக இருக்கும். இதில் உள்ள புரோட்டீன்கள், ஒமேகா 3 மற்றும் தாதுக்கள் முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு, அடர்த்தியாகவும் இருக்கும். உங்கள் தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க விரும்பினால், வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை முட்டை ஹேர் பேக்கை பயன்படுத்த வேண்டும். நீங்கள் எளிதாக தயாரித்து பயன்படுத்தக்கூடிய சில முட்டை ஹேர் பேக்குகளை எப்படி செய்வது என்று இங்கு தெரிந்துகொள்ளலாம்...
 

வறண்ட முடிக்கு முட்டை ஹேர் பேக்: ஒரு பாத்திரத்தில் 2 முட்டையின் மஞ்சள் கரு மற்றும் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் கலக்கவும். இந்த பேஸ்ட்டை தலைமுடியில் நன்றாக தடவி மூடி வைக்கவும். சுமார் 20 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் முடியை குளிக்கவும். வாரத்திற்கு இரண்டு முறையாவது இதைச் செய்யுங்கள்.
 

எண்ணெய் முடிக்கு முட்டை ஹேர் பேக்: ஒரு பாத்திரத்தில் 2 முட்டையின் வெள்ளைக்கருவை வைக்கவும். பின்னர் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை கலந்து தலைமுடியில் தடவவும். 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின் குளிர்ந்த நீரில் குளிக்கவும். இதனை வாரம் இருமுறை தடவவும்.

இதையும் படிங்க:  மென்மையான மற்றும் கட்டுக்கடங்காமல் வளர முடிக்கு "வாழைப்பழம் ஹேர் மாஸ்க்" ஐடியாக்கள் இதோ..!!

அலோ வேரா மற்றும் முட்டை: ஒரு பாத்திரத்தில் 2 முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் 2 டீஸ்பூன் அலோ வேரா ஜெல் ஆகியவற்றை நன்றாக கலந்து, உங்கள் தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் அப்படியே விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் முடியை நன்கு கழுவவும். இதனை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க:  முடி உதிர்வு மற்றும் பொடுகு தொல்லையா? இதிலிருந்து விடுபட சிறந்த வழி இதோ..!!
 

மருதாணி மற்றும் முட்டை: இதற்கு 2 டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில்  இரவு முழுவதும் ஊறவைக்கவும். பின் காலையில் இதனுடன் 1 கப் மருதாணி பொடியுடன் சிறிது தண்ணீர் கலந்து பேஸ்ட் தயாரிக்கவும். இவற்றுடன் 1 முட்டையின் மஞ்சள் கருவையும் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரம் விடவும். பின்னர் உங்கள் தலைமுடியை லேசான ஷாம்பு மற்றும் குளிர்ந்த நீரில் கழுவவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டை: ஒரு பாத்திரத்தில் 1 முட்டை மற்றும் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் கலக்கி, பின் அவற்றை முடியில் தடவவும்.சுமார் 20 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் உங்கள் தலைமுடியை குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.

வாழைப்பழம் மற்றும் முட்டை: இதற்கு 1 வாழைப்பழத்தை மசித்து அதில் ஒரு முழு முட்டையையும் சேர்க்கவும். பின்னர் அதில் 1 தேக்கரண்டி அளவு ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். இந்த ஹேர் பேக்கை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தடவவும். அதை 15-20 நிமிடங்கள் விடவும். பின் உங்கள் தலைமுடியை குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.

click me!