தனுஷின் 50வது படம் ராயன். இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி, இயக்கியும் உள்ளார் தனுஷ். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். அவரின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ராயன் படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், வரலட்சுமி சரத்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
24
Raayan
ராயன் திரைப்படம் அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி இருக்கிறது. கடந்த ஜூலை 26-ந் தேதி திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ரிலீசான மூன்றே நாட்களில் ரூ.75 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த ராயன் திரைப்படம் தொடர்ந்து வசூலை வாரிக்குவித்து வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. இதனால் தனுஷ் செம குஷியில் உள்ளார்.
ராயன் படத்தில் தனுஷுக்கு அடுத்தபடியாக அதிக ஸ்கோப் உள்ள கதாபாத்திரம் என்றால் அது சந்தீப் கிஷான் கேரக்டர் தான். அந்த கேரக்டரில் முதலில் பிரபல தமிழ் ஹீரோ ஒருவரை தான் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால் அவர் ரஜினி படத்தில் பிசியாக இருந்ததால் ராயனில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டார். அந்த ஹீரோ வேறுயாருமில்லை நடிகர் விஷ்ணு விஷால் தான். அவர் தான் சந்தீப் கிஷானுக்கு பதிலாக நடிக்க இருந்தாராம்.
44
Vishnu vishal rejected raayan movie
அந்த சமயத்தில் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடித்து வந்த லால் சலாம் படத்தில் ஹீரோவாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றதால் ராயன் படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடிக்கும் சான்ஸை மிஸ் பண்ணி இருக்கிறார் விஷ்ணு விஷால். நிஜமாவே இது ஒரு காஸ்ட்லி மிஸ் என்று தான் சொல்ல வேண்டும், ஏனெனில் ராயன் படத்துக்கு பதிலாக அவர் தேர்வு செய்து நடித்த லால் சலாம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. மறுபுறம் அவர் மிஸ் பண்ணிய ராயன் திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.