ஆரம்ப காலத்தில் சினிமாவில் தன்னை ஒரு ஹீரோவாக நிலைநிறுத்திக்கொள்ள, பல்வேறு போராட்டங்களையும், சவால்களையும் சந்தித்தவர் விஜய் சேதுபதி. லவ் போர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி உள்ளிட்ட பல படங்களில் கூட்டத்தில் ஒருவராக வந்த இவரின் நடிப்பு திறமையை வெளியே தெரியவைத்தது என்னவோ குறும்படங்கள் தான்.
இதை தொடர்ந்து இவர் நடித்த, தென்மேற்கு பருவக்காற்று, நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம், சூது கவ்வும், இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பண்ணையாரும் பத்மினியும் போன்ற ஓவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
விஜய் சேதுபதியை தாண்டி, இவரின் மகன் சூர்யாவும், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு... மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் இப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய குடும்பத்துடன் எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தில், விஜய் சேதுபதியின் மகள்... ஸ்ரீஜாவின் லுக் ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது. இந்த புகைப்படத்தில், செம்ம ஸ்டைலிஷாக டீ-ஷர்ட் அணிந்து, பாப் கட்டிங் ஹேர் ஸ்டைலில் உள்ளார். இதை பார்த்து ரசிகர்கள், ஸ்ரீஜா, ஹீரோயின் போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.