"அவனுக்கு சினிமா வேண்டாம்".. மகனை கலெக்டராக்கி அழகு பார்த்த சின்னி ஜெயந்த் - வெளியான அடுத்த குட் நியூஸ்!

Ansgar R |  
Published : Jul 13, 2024, 05:28 PM IST

Chinni Jayanth : திரைத்துறையை பொருத்தவரை, புகழின் உச்சியில் இருக்கும் நடிகர்கள், தங்களுடைய வாரிசுகளையும் சினிமா துறைக்கு அழைத்து வருவது இயல்பான ஒன்று தான்.

PREV
14
"அவனுக்கு சினிமா வேண்டாம்".. மகனை கலெக்டராக்கி அழகு பார்த்த சின்னி ஜெயந்த் - வெளியான அடுத்த குட் நியூஸ்!
Revathi

கடந்த 1984ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "கை கொடுக்கும் கை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சின்னி ஜெயந்த், தன்னுடைய மகனை நடிப்புத் துறையில் நுழைய விடாமல், இன்று அவரை ஒரு சப் கலெக்டராக்கி அழகு பார்த்திருக்கிறார் என்றால் அது நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒரு விஷயம் தான்..

இந்தியன் 2வில் நடிக்க நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

24
Chinni Son

தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த குணசித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் பயணித்து வருபவர் தான் சின்னி ஜெயந்த். "கை கொடுக்கும் கை" படத்தின் மூலம் தொடங்கிய இவரது பயணம், இவ்வாண்டு துவக்கத்தில் வெளியான ஆர் ஜே பாலாஜியின் "சிங்கப்பூர் சலூன்" திரைப்படம் வரை தொடர்கிறது. யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் "போட்" திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அவர்.

34
sub collector

சிறந்த நடிகராக மட்டுமல்லாமல், சிறந்த அப்பாவாகவும் சின்னி ஜெயந்த் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவருடைய மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் ஜெயந்த், தொடக்கத்தில் திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக பணியாற்றிய, இப்பொழுது விழுப்புரம் மாவட்ட சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார். யூபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 75வது இடம் பெற்று இவர் தேர்ச்சி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

44
Chinni Son Marriage

இந்நிலையில் தனது வீட்டில் நடக்கவிருக்கும் முதல் விஷேஷம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சின்னி ஜெயந்த். ஆம் விரைவில் சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் ஜெயந்திற்கு திருமணம் நடக்கவுள்ளது. இப்பொது அதற்கான பத்திரிகை வைக்கும் பணியில் பிசியாக ஈடுபட்டு வருகின்றார் நடிகர் சின்னி ஜெயந்த். 

கோலிவுட்.. நாயகனாக அறிமுகமாகும் YouTube பிரபலம்.. படத்தின் நாயகி யார் தெரியுமா? அட்லீ போட்ட பிள்ளையார் சுழி!

click me!

Recommended Stories