தமிழ் சினிமாவில் சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான மூத்த நடிகை தான் விசித்ரா. தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என்று பல மொழிகளில் பிஸியாக நடித்து வந்த இவர், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான "இரவு பாடகன்" என்ற திரைப்படத்தோடு தனது கலை பயணத்தை நிறுத்திக் கொண்டார்.
தனது மூன்று குழந்தைகளோடு நேரத்தை செலவிட்டு வந்த அவர் அண்மையில் சின்னத்திரையில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் கலந்துரையில் பயணிக்க தொடங்கினார். தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் 77 நாட்களையும் கடந்து பயணித்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் அவரது இளம் வயதில் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.