அதே நேரத்தில் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கிவரும் வைகைப்புயல் வடிவேல் அவர்கள் தன்னை வளர்த்து விட்ட விஜயகாந்த் அவர்களுடைய மறைவுக்கு நேரில் வராதது மட்டுமல்லாமல், இதுவரை ஒரு இரங்கல் செய்தி கூட தெரிவிக்காதது ஏன் என்கின்ற கேள்வியை முன் வைத்து வருகின்றனர் பலர்.
வடிவேலு அவர்கள் ஒரு நடிகனாக மாபெரும் வெற்றியை பெற்றிருந்தாலும், ஒரு சராசரி மனிதனாக அவர் தோல்வியை கண்டுள்ளதாகவே கூறுகின்றனர் மக்கள். இந்நிலையில் அவருக்கும் நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கும் இடையே இருந்த பிரச்சினைகள் குறித்து பல தகவல்கள் இணையத்தில் உலவி வரும் இந்த நேரத்தில் நடிகர் பொன்னம்பலம் வெளியிட்ட சில தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரபல திரைப்பட விமர்சகரும், இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன்.