வாஸ்து படி, வீட்டின் வடக்கு திசையில் இதையெல்லாம் வச்சா ஐஸ்வர்யம் பெருகுமாம்!

First Published | May 23, 2024, 10:14 AM IST

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களின் திசையும் சரியாக இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்கள் சுப பலன்களைப் பெறுகிறார்கள். ஒருவேளை, தவறான திசையில் வைத்தால், வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை பெறுவார்கள்.

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இதில் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் சில விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், வாஸ்துவில் வடக்கு திசையின் முக்கியத்துவம் என்ன என்பதையும், வடக்கு திசையில் வைப்பதன் மூலம் ஒரு நபருக்கு பொருளாதார ரீதியாக என்னென்ன  நன்மைகள் கிடைக்கும் என்பதையும் பார்க்கலாம்.

வடக்கு திசையின் முக்கியத்துவம்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, எல்லா திசைகளுக்கும் அவற்றிற்கென சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால், வடக்கு திசையில் கடவுள்கள் வசிப்பதாக கருதப்படுவதால் இந்த திசை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக, செல்வத்தின் கடவுளான குபேர் இந்த திசையில் வசிப்பதாக நம்பிக்கை உள்ளது. எனவே, இந்த திசையை வாஸ்து தோஷங்கள் இல்லாமல் வைத்திருந்தால், செல்வம் கிடைக்கும்.

Tap to resize

வடக்கு திசையில் இவற்றை வையுங்கள்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் வடக்கு திசையில் கண்ணாடி வைத்தால், எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வராது. அதுபோல, வீட்டின் சமையலறையும் வடக்கு திசையில் இருந்தால், உணவு மற்றும் பணம் எப்போதும் நிரம்பி வழியும். 
மேலும் வீட்டின் பிரதான நுழைவு வாயில் வடக்கில் இருந்தால்  மங்களகரமானதாக கருதப்படுகிறது.

இந்த செடிகளை வடக்கு திசையில் வையுங்கள்: வாஸ்துவில் மணி பிளாண்ட்க்கு அதிக முக்கியத்துவம் உண்டு. எனவே, இந்த செடியை வீட்டின் வடக்கு திசையில் வைத்தால், பொருளாதாரத்தில் லாபம் கிடைக்கும் மற்றும் வறுமை வீட்டை விட்டு விலகி ஓடும். அதுபோல, துளசி செடியையும், 
வீட்டின் வடக்கு திசையில் வைத்தால், வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவுவது மட்டுமின்றி, தடைகள் நீங்கும்.  

இந்த சிலையை வடக்கு திசையில் வையுங்கள்: வடக்கு திசை செல்வத்தின் கடவுளான குபேரின் திசையாகக் கருதப்படுவதால், இந்த திசையில் குபேரனின் சிலையை வைத்தால், சுப பலன்களைப் பெறுவீர்கள். அதுமட்டுமின்றி, செய்யும்  தொழிலில் தொடர்ந்து முன்னேற்றம் காண்பீர்கள்.

Latest Videos

click me!