இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகரும் சினிமா விமர்சகர்மான பயில்வான் ரங்கநாதன் அவர்கள், சிம்பு மற்றும் நடிகை திரிஷா குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் இணைந்து நடித்து வெளியாகி இன்றளவும் சூப்பர் ஹிட் திரைப்படமாக திகழ்ந்து வருவது விண்ணைத்தாண்டி வருவாயா படம்.
ஒன்று சேராத காதல் கதை கொண்ட படம் என்றாலும் கூட, பாடல்கள், காட்சி அமைப்பு, வசனம் என்று இந்த படத்தில் வரும் அனைத்துமே மிக அழகாக இருக்கும் என்றே கூறலாம்.