
இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் ஒருவர். 1970களில் அபூர்வ ராகங்கள் மூலம் அறிமுகமான ரஜினி சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மாறினார். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராகவே ரஜினி இருந்து வருகிறார். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ரஜினியின் படம் இப்போதும் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது..
தற்போது 71 வயதாகும் ரஜினி, இன்றும் அதே துடிப்பு, ஸ்டைலுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் பாக்ஸ் ஆபிஸ் கிங், ரெக்கார்டு மேக்கராகவும் ரஜினி இருக்கிறார். எனவே புதிய சாதனைகளை படைப்பதோ அல்லது ஏற்கனவே உள்ள சாதனைகளை முறியடிப்பதோ நடிகர் ரஜினிக்கும் ஒன்றும் புதிதல்ல.
இதன் காரணமாகவே ரஜினிகாந்திற்கு அதிக சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருகின்றனர். தற்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் மாறி உள்ளார். அந்த வகையில் உலகளவில் அதிக வசூல் செய்த ரஜினி படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
ரஜினியை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய படம் ஜெயிலர் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இப்படத்திற்கு நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மோகன் லால், ஜாக்கி ஷெரஃப், ஷிவ்ராஜ்குமார் என பலர் நடித்திருந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டியது. இந்த படம் உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்து அதிக வசூல் செய்த 2-வது தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
எந்திரன் படத்தின் 2-வது பாகமாக மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவான படம் 2.0. ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் நாடு முழுவதும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. ஆம். இப்படம் 700 கோடி முதல் 800 வரை வசூல் செய்தது. இதனால் இப்படம் இன்று தமிழில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக உள்ளது.
2010-ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் எந்திரன். இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாகும். இப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் அசால்டாக 100 கோடி வசூலை கடந்த மொத்தம் சுமார் 300 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. இதனால் 2010-ல் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையைம் எந்திரன் படம் பெற்றது..
2016-ம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் கபாலி. மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனை படைத்தது. ஆம். இப்படம் வெளியான முதல் நாளே ரூ.21 கோடி வசூல் செய்தது. இதனால் முதல் வாரத்திலேயே ரூ.100 கோடி வசூலை தாண்டியது. இப்படத்தின் மொத்த வசூல் ரூ.350 கோடிக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த்:
தமிழ் சினிமாவை பொறுத்தவரை முதலிடம் என்றாலே அது சூப்பர் ஸ்டாருக்கு தான். தென்னிந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளத்தை குவித்து வைத்திருக்கிறார். ஸ்டைல், பஞ்ச் டைலாக்கால் மாஸ் காட்டும் ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். சம்பளத்தின் அடிப்படையிலும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் வகையிலும் ரஜினிகாந்த் தான் டாப் 10 பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த படம் பேட்ட. 2019-ம் ஆண்டு வெளியான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் 100 கோடி வசூல் படங்களில் இதுவும் ஒன்று. பேட்ட படம் சுமார் 240 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் கைகோர்த்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். 2020-ம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரஜினியின் தர்பார் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இப்படம் அசால்டாக 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படத்தின் மொத்த வசூல் ரூ240 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2008-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் சிவாஜி. இப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூலை குவித்தது. அந்த நேரத்தில் தமிழில் அதிக வசூல் செய்த படமாக சிவாஜி இருந்தது. தமிழில் 100 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையையும் சிவாஜி பெற்றது. இப்படம் 160 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.