கூகுள் முதல் யூடியூப் வரை.. இந்திய வம்சவாளியை சேர்ந்த 10 சிஇஓ-க்கள் லிஸ்ட் இதோ!

Indian CEOs : இந்திய வம்சாவளியை சேர்ந்த பல தொழிலதிபர்கள் உலகின் புகழ்பெற்ற நிறுவனங்களில் சிஇஓக்களாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட 10 தலைவர்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
 

சத்யா நாதெல்லா (மைக்ரோசாப்ட்) : ஹைதராபாத்தில் இந்து குடும்பத்தில் பிறந்த இவர் 2014 இல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியானார்.

சுந்தர் பிச்சை (கூகுள்) :  2015இல் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான பிறகு இவர் சுந்தர் பிச்சை, கூகுள் குரோம், கூகுள் டிரைவ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற முக்கிய தயாரிப்புகளை மேம்படுத்துவதினார். பிறகு 2019 ஆம் ஆண்டில் கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட் இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியானார்.


சாந்தனு நாராயண் (அடோப்) : இவர் போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர் மற்றும் பிரீமியர் ப்ரோ போன்ற மென்பொருள் மூலம் அடோப்பை டிஜிட்டல் படைப்பாற்றலின் மையமாக மாற்றினார். இவர் 2007 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியானார்.

இதையும் படிங்க:  இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ.க்கள்: ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு!

வசந்த் நரசிம்மன் (நோவார்டிஸ்) : 2018ஆம் ஆண்டு முதல் நோவார்டிஸ்  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியானார். 

இதையும் படிங்க:  பன்னாட்டு நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களாக இந்தியர்கள்: எலான் மஸ்க்கை ஈர்த்த பட்டியல்!

லக்ஷ்மன் நரசிம்மன் (ஸ்டார்பக்ஸ்) : இவர் 2022 ஆம் ஆண்டில் ஸ்டார் பாக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியானார். சாவித்திரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் மற்றும் நிதி துறையில் எம்பிஏ பட்டம் பெற்றார். சமீபத்திய ஊடக அறிக்கையின் படி இவர் பதிவியில் இருந்து நீக்கப்பட்டார்.

லீனா நாயர் (சேனல்) : இந்திய வம்சவாளியைச் சேர்ந்த இவர் 2022 ஆம் ஆண்டில் பிரெஞ்சு சொகுசு பிராண்டான சேனலில் தலைமை நிர்வாக அதிகாரியானார். முன்னதாக இவர், யூனிலீவரில் தலைமை மனிதவள அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீல்மோகன் (youtube) : இவர் 2023 ஆம் ஆண்டில் யூ டிவி தலைமை பொறுப்பை ஏற்றார். இவர் youtube நிறுவனத்தை புதிய உயரத்திற்கும், பயனர்களுக்கு ஏற்றதாகவும் மாற்றினார்.

சஞ்சய் மெஹ்ரோத்ரா (மைக்ரோன் டெக்னாலஜி) : இவர் 2017 ஆம் ஆண்டில் மைக்ரோடெக்னாலஜியின் சிஇஓ ஆனார். முன்னதாக இவர் 2013 முதல் 2016 வரை SanDisk என்ற நிறுவனம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜூவ்சூரி (இன்மார்சாட்) : 2021 முதல் இவர் இன்மார்சாட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியானார். முன்னதாக, இவர் 2014 முதல் 2020 வரை நோக்கியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் பண்டிட் (தி ஓரோஜென் குழுமம்) : தி ஓரோஜென் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர் ஸ்டான்லி மற்றும் சிட்டி குரூப் போன்ற பெரிய நிறுவனங்களில் அனுபவம் பெற்ற நிதி நிபுணர் ஆவார். இவர் 2007 முதல் 2012 வரை சிட்டி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!