தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவற்றின்போது மக்களின் பாதுகாப்பு கருதி அந்தந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.