அட.. ஒரே பாட்டில் ஃபேமஸான இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? இப்பவும் அதே இளமையோடு இருக்காங்களே..

Published : Jul 19, 2024, 06:37 PM IST

தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான கௌரி முன்ஜாலின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
15
அட.. ஒரே பாட்டில் ஃபேமஸான இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? இப்பவும் அதே இளமையோடு இருக்காங்களே..
Gowri Munjal

2005-ம் ஆண்டு வெளியான Bunny என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகின் மூலம் அறிமுகமானவர் கௌரி முன்ஜால். இந்த படத்தில் அவர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கௌரியின் முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.. 

25
Gowri Munjal

இதை தொடர்ந்து அவருக்கு மற்ற தென்னிந்திய மொழிகளில் வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அதே ஆண்டு கன்னட திரையுலகில் அவர் எண்ட்ரி கொடுத்தார்.  இதை தொடர்ந்து சில கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் அவர் நடித்தார்.

35
Gowri Munjal

2007-ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியான தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார் கௌரி முன்ஜால். பி.வாசுவின் மகன் சக்தி வாசு ஹீரோவாக அறிமுகமான இந்த படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. எனினும் இந்த படத்தில் இடம்பெற்ற அரபு நாடே அசந்து நிற்கும் அழகியான நீ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த பாடல் மூலம் பிரபலமானார் கௌரி. 

45
Gowri Munjal

இதை தொடர்ந்து 2008-ம் ஆண்டு சிவாஜியின் பேரன் சிவாஜி தேவ் நடிப்பில் வெளியான சிங்கக்குட்டி என்ற படத்தில் நடித்திருந்தார். எனினும் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் தெலுங்கு, கன்னட படங்களில் நடிக்க தொடங்கினார்.

 

55
Gowri Munjal

பின்னர் ஒரு சில மலையாளப் படங்களில் நடித்த கௌரி முன்ஜால் 2011-ம் ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிப்பதையே முழுவதும் நிறுத்திவிட்டார். அதன்பின்னர் அவர் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. இந்த நிலையில் நடிகை கௌரி முன்ஜாலின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இன்னமும் இளமை குறையாமல் இருக்கும் அவரை பார்த்து பலரும் தங்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

click me!

Recommended Stories