பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்த தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

First Published | Nov 20, 2023, 8:42 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

Leo movie

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வந்த திரைப்படம் தான் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இதில் விஜய்யுடன் திரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர், வையாபுரி, மடோனா செபாஸ்டியன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. செவன் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது.

Leo vijay

லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டது. ரிலீசான முதல் நாளே ரூ.148 கோடி வசூலித்து மாபெரும் சாதனை படைத்த லியோ திரைப்படம் தற்போது வரை உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது. கடந்த நவம்பர் 10-ந் தேதி தீபாவளி ரிலீஸ் படங்களால் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட லியோ திரைப்படம் ஒரு சில தினங்களில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize

Leo OTT release

இதற்கு காரணம் கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் தான். அப்படம் பிளாப் ஆனதால் அதற்கு பதிலாக 100-க்கு மேற்பட்ட திரையரங்குகளை லியோ ஆக்கிரமித்தது. இப்படி ஒரு மாதத்தை கடந்தும் இப்படம் வெற்றிநடைபோட்டு வருவதால் இதன் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிடாமல் இருந்து வந்தனர். தற்போது கிட்டத்தட்ட லியோ படத்தின் தியேட்டர் ஓட்டம் முடிவுக்கு வர உள்ள நிலையில், அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

Leo OTT release date

அதன்படி லியோ திரைப்படம் வருகிற நவம்பர் 24-ந் தேதி ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதனால் வருகிற நவம்பர் 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஒரு ஹிந்தி.. ஒரு தெலுங்கு.. இரண்டு தமிழ்.. மொத்தம் நாலு - அடுத்தடுத்த படங்கள் குறித்து அட்லீ கொடுத்த அப்டேட்!

Latest Videos

click me!