எல்லாம் லியோ மயம்.. மலேசியாவில் நடக்கும் வெறித்தனமான ப்ரோமோஷன் - சுட சுட ரெடியாகும் Coins!
Ansgar R |
Published : Sep 09, 2023, 08:52 PM IST
ஏறக்குறைய இந்திய சினிமாவில் உள்ள அத்தனை முன்னணி நடிகர்களும் இணைந்து நடித்துள்ள ஒரு திரைப்படம் தான் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தளபதி விஜயின் லியோ திரைப்படம்.
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தளபதி விஜய் அவர்கள் தனது 67வது திரைப்படத்தில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.
தளபதி விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூரலிகான், மிஷ்கின், கிரண், பிரியா ஆனந்த், நடன இயக்குனர் சாண்டி, மனோபாலா, ஜார்ஜ் மரியான் என்று ஒரு மாபெரும் நடிகர் பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
34
Vijay and trisha
பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜயுடன், பிரபல நடிகை திரிஷா இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட பணிகளை முடித்துள்ள தளபதி விஜய் அவர்கள் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 68வது பட பணிகளை விரைவில் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
44
Leo Promotion
இந்நிலையில் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலக அளவில் வெளியாகவுள்ள நிலையில் லியோ திரைப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. குறிப்பாக மலேசியாவில் லியோ திரைப்படத்தின் பெயர் பொறிக்கப்பட்ட காசுகள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் அவை விரைவில் பிரமோஷன் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.