தலைவர் 171.. படக்குழு என்னை அப்ரோச் பண்ணல.. ஆனா.. - ட்விஸ்ட் வைத்து பேசிய மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி!

Ansgar R |  
Published : Nov 21, 2023, 03:38 PM IST

Mammooty About Thalaivar 171 : கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய நடிப்பில் உருவாகவுள்ள அவரது 171வது திரைப்படத்தை பிரபல இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி அவர்கள் இணைய உள்ளதாக சில தகவல்கள் வெளியானது.

PREV
13
தலைவர் 171.. படக்குழு என்னை அப்ரோச் பண்ணல.. ஆனா.. - ட்விஸ்ட் வைத்து பேசிய மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி!
Lokesh Kanagaraj

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள ஒரு இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். இவருடைய இயக்கத்தில் அண்மையில் வெளியான லியோ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில், தற்போது தனது அடுத்த பட பணிகளை விரைவில் துவங்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இந்த வாரத்தில் தலைவர் 171 பணிகளை துவங்கும் லோகேஷ், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அந்த படப்பணிகளை துவங்குவர் என்று அவரே அறிவித்துள்ளார். 

Mansoor Ali Khan: நான் தான் த்ரிஷா மீது வழக்கு போடணும்! தெரியாமல் பேசும் லோகேஷ்! மன்சூர் அலிகான் பகீர் பேட்டி!

23
Super Star

அதே நேரத்தில் தனது ஜெயிலர் பட பணிகளை முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது ஜெய் பீம் படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் அவருடைய 170வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த நேரத்தில் அவருடைய 171வது திரைப்படத்தில் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி அவர்களும் இணையுள்ளதாக தகவல்கள் வெளியானது.

33
Mammooty

இந்நிலையில் இது குறித்து பேசி உள்ள மம்மூட்டி அவர்கள், இதுவரை படக்குழு தன்னை அணுகவில்லை என்று கூறியுள்ளார். இதன் மூலம் தலைவர் 171 திரைப்படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்று பரவிய வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆனால் அது மட்டுமல்லாமல் படக்குழு தன்னை அணுகினால் இந்த திரைப்படத்தில் நடிக்க தனக்கு முழு சம்மதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மம்மூட்டி கொடுத்த இந்த கிறீன் சிக்னல் காரணமாக லோகேஷ் கனகராஜ் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வாரா என்ற ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Read more Photos on
click me!

Recommended Stories